நயாகரா ஐஸ்கீரீம்...!

 நயாகரா நீர்வீழ்ச்சியின் பயணமாக The maid of mid என்று சொல்லப்படுகிற சாகசபயணமாக way2go youtube சேனலில் வெளியான வீடியோ ஒன்றைப் பார்த்தேன். உண்மையாக நேரில் சென்றுபார்த்தது போல அத்தனைசுவாரஸ்யமாக இருக்கிறது. அமெரிக்கன்பால்ஸ், நயாகராபால்ஸ், ரெயின்போபாலம் என பார்ப்பதற்கு பிரமாண்டமான இடமாக இருக்கிறது. அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கிற ரெயின்போப்ரிட்ஜ் 1000 அடிக்கும்மேலானநீளம். தொலைவிலிருந்து பார்க்க பெரியகிளிப் கொண்டு இரண்டுபெட்டிகளை தாங்கிப்பிடித்ததைப் போலிருக்கிறது. இந்தியா பாக்கிஸ்தான் எல்லையை தவிர வேறு எதுவும் நான் டிவியில் பார்த்ததுகூட இல்லை. பள்ளிவிடுமுறை நாட்களில் ஊருக்கு போகும்போது ஒருமாவட்டம் முடிந்து இன்னொரு மாவட்ட உட்கோட்டஎல்லை ஆரம்பம் என்பதையும் ராமேஸ்வரம் பாம்பன்பாலத்தைத் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாது. ஆனால்இந்தவீடியோவில் " observation டெக் " என்கிற பெரியடவர் போன்ற உயரமான இடத்திலிருந்து நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கையில் உடைந்து நொறுங்கிய ஐஸ்கிரீம்போல அருவிகிடக்கிறது. மேலும் அமெரிக்கன்பால்ஸ்லிருந்து கனடாவைபார்க்கமுடியும். குறிப்பாக ஒருநாட்டிலிருந்து இன்னொரு நாட்டைபார்ப்பது வினோதமாக இருக்கிறது. மேலும் நேரடியாக மிகஅருகில் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கையில் பிரம்மாண்டத்தின் முன்நிற்பது போலவே தான். வீடியோ பார்த்ததே இப்படிஎன்றால் நேரில்போய்பார்த்தால் நினைக்கவே கிளுகிளுப்புதான். அருவியை நெருங்க நெருங்க மனம் சிந்தனை அடையாளம் உடலைக்கூட இழந்து நம்பறந்துவரும் குளிர்காற்றாக மாறிவிடுகிறோம் என்பதுதான்உண்மை. பெரியசுனாமி அலையின்முன்பாக நிற்பதைப்போல மலைப்பாகஉள்ளது. போட்டின் அடியில் நுரைத்து நகரமுடியாமல் ஆழத்தோடு போய்க்கொண்டிருக்கும் நதி. காலுக்கடியில் அனகோண்டாபாம்பு மெதுவாகஊர்வதைபோல.மிகநல்லஅனுபவம். தொடர்ச்சியாக நிறைய தொடர் காணொளிகள் கிடக்கின்றன லிங்க் கீழே உள்ளது :



https://youtu.be/UiX7O8teDCw



Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )