சிறுவர்களின் பசி

 சில மாதங்களுக்கு முன்பு youtube இல் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பசியின் கதை என்ற உரையை கேட்டேன். மனிதர்களின் வாழ்க்கை முழுவதும் அவர்களை துரத்துவது பசிதான். உலகின் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் தீர்க்கவே முடியாத பிரச்சனை பசிதான். பசித்த வேளையில் உணவு இல்லாமல் போவதை போல துயரமான விஷயம் எதுவுமில்லை. இன்றைக்கும் சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் மனிதர்கள் குடும்பத்தை பிரிந்து அறைகளிலும் மேன்ஷன்களிலும் தங்கியிருந்து வேலைக்கு போகிறார்கள். அவர்களுக்கு இருக்கிற ஒரே பிரச்சனை உணவுதான். காலையில் இட்லிக்காக வரிசையில் நிற்க வேண்டும், மதியம் சாம்பார் சாதமோ, வரைட்டி ரைஸ் அல்லது தக்காளி சாதம் இல்லையென்றால் 50ரூபாய் மீல்ஸ் இவற்றுக்காக வரிசையில் நிற்க வேண்டும். சில நேரங்களில் மதியம் 2 மணிக்கு மேல் எந்த ஹோட்டலிலுமே சாப்பாடு இருக்காது. வேறு வழிஇல்லாமல் ஜூஸ் குடித்து அல்லது டீ குடித்து விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விட வேண்டிய துயரம் தான். கையில் பணமிருந்தும் உணவு கிடைக்காத அவலம்தான். எல்லோருக்கும் உலகத்தில் மூன்று வேளை உணவு கிடைப்பதில்லை. அதுவும் இளம் வயதில் அதுவும் பத்து, ஏழு வயது சிறுவர்களுக்கு வறுமையின் காரணமாக உணவு கிடைக்காமல் போவது அவர்கள் வாழ் முழுவதும் அந்த வலி மனதில் இருந்து கொண்டே இருக்கும். அதாவது மிடில் கிளாஸ் குடும்பங்களை விட பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களில் மூன்று வேளை உணவு என்பதே சவாலான விஷயம்.

அவருடைய உரையில் பசிக்காக காத்திருக்க முடியாமல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் கதை மனதை உலுக்கி விட்டது. ஒரு வாரத்திற்கு முன்பாக எஸ். ராவின் கேள்விக் குறி எனும் கட்டுரை தொகுப்பில் சென்னை போன்ற பெரு நகரங்களில் அறையில் தங்கி வேலைக்கு ச் செல்லும் வசிக்கும் இளைஞர்கள், ஒண்டிக் குடித்தனம் நடத்துவர்களை வீட்டுக்கு அழைத்து ஒரு வேளை வீட்டு சாப்பாடு போடலாம். அதுவும் பண்டிகை நாட்களில் உணவகங்கள், ஹோட்டல் கடைகள் இருக்காது. அன்றைய பாடு திண்டாட்டம்தான். அம்மா ஹோட்டல் மட்டுமே இன்றும் சில மனிதர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பகிர்ந்து உண்ணும் பழக்கம் நம்மிடையே குறைந்து விட்டது.

உணவை பகிர்ந்து உண்ண கற்றுக் கொள்வது சிறந்த மனித நேயத்தின் வெளிப்பாடு. இந்த உரை பசியின் கதையை எடுத்து சொல்கிறது. மனிதர்களை போலவே அனைத்து உயிர்களுக்கும் நம்மால் முடிந்த உதவியை உணவை பகிர்ந்து அழிப்போம்.

இந்த பசியை போக்கத்தான் வள்ளலார் மாபெரும் உணவு கூடத்தை உருவாக்கி பசியோடு வருபவர்களின் பசியை போக்கினர். வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு இன்னும் எத்தனையோ எளிய மனிதர்களின் பசியை போக்கிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் சில மனிதர்கள் ஹோட்டல் உணவகங்கள் நடத்தி குறைந்த விலைக்கு உணவளித்து சேவை செய்து அறத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு meme ஒன்றில் ஒரு கடையில் பசித்தவர்களுக்கு உணவு இலவசம் என்று எழுதி வைக்கப் படிருந்ததை பார்த்தேன். இந்த மனிதர்களின் மனது தான் அட்சய பாத்திரம். உண்மையில் அட்சய பாத்திரம் என்பது மனிதர்களின் மனது தான். கொடுப்பதற்கு மனது இருந்தால் போதும். என்று உரையில் எஸ். ரா அவர்கள் சொல்வது மிக முக்கியமானது.

Click and watch video

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )