ஒரு கண் மூடிய மஞ்சள் பூனை
மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கு இடையே உள்ள அன்பும் பிணைப்பும் அவருடைய ஓவியத்தில் அழகாக வெளிப்படுகிறது. கலையின் வழியாக இயற்கை மற்றும் பிராணிகளிடையேயான நேசத்தை விளக்கபவையே அவருடைய ஓவியங்கள்.
இன்னாரூடாவின் ஓவியத்தில் வரக் கூடிய பூனைகள் மனிதர்களின் உருவகம் தான். படுக்கையில் படுத்த படி முகத்தை இறுக்கமாக வைத்தபடி இருக்கும் பூனை. மௌனத்தின் அடையாளமாக இருக்கிறது. கருப்பு கோட் அணிந்தபடி ஒரு பூனை சிகரெட் பைப் ஒன்றை வாயில் வைத்த படி இருக்கிறது.
அது illustrator அல்லது motion designer ஆக இருக்கும் inna ரூடா நெதர்லாண்டை சேர்ந்தவர் . கூகிலில் பெஹன்ஸ் ( behance app) செயலியில் அவரது ஓவியங்கள். காணக் கிடைக்கிறது . மனிதர்களை போலவே தோற்றமளிக்கும் இந்த ஓவியங்கள் அவர்களின் மனநிலையை விளக்குபவையாக உள்ளது. இன்னொரு ஓவியத்தில் தந்தை மற்றும் அம்மாவுடன் ஒரு குழந்தை பனியில் சந்தோசமாக படுத்துகொண்டுள்ள ஓவியம் மிக அழகானது. அதை பார்த்த உடனே மனதில் ஒரு சந்தோசமும். குடும்பத்தோடு சேர்ந்து வாழ்ந்த அற்புதமான தருணங்களை நினைவு படுத்துகிறது. சொசைட்டி6 ( society6) எனப்படும் தளத்தில் அவருடைய கவிதைகள் விற்பனைக்கு கிடைக்கிறது. தலையணையில், T-sirt, சோபா, லேப்டாப் டீ கப் போன்ற அனைத்து பொருட்களிலும் அவருடைய ஓவியங்கள் வரையப் பட்டு விற்பனைக்கு உள்ளது .
சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட கொரில்லா குரங்கு ஒன்றை வரைந்துள்ளார். அதன் கண்கள் கவனமாக எதையோ எதிர்பார்த்த படி உள்ளது. பிரதமர் தேர்தலில் வாக்கெடுப்பு முடிந்து தேர்தல் முடிவுக்கு எதிர்பார்த்து காத்திருக்கும் மாதிரியான ஓவியம் மிக அழகானது. அந்த குரங்கு அமர்ந்துள்ள விதம் அதன் கூர்ந்து நோக்கும் கண்கள் அழகானவை. கிவி நாட்டில் உள்ள வானிலையை விளக்கும் அவருடைய ஓவியம் யதார்த்தமாக உள்ளது.
மின்கம்பத்தின் வெளிச்சத்தில் மழை பொழிவதை பார்ப்பது தனித்துவமான தருணம். அதுவும் இரவில் அந்த காட்சி மின்கம்ப ஒளி காற்றும் மழையும் மனதின் துயரங்களையும் நினைவுகளையும் வெளிப் படுத்துபவை. மனதின் போராட்டங்களை புயலும் மழையும் வெளிக் காட்டுவதை போலவே. இதில் உள்ள காற்றின் கண்கள் இயற்கை மீதுள்ள பிரமிப்பின் அடையாளமாக உள்ளது .
பலூன் தயாரிப்பவன் பற்றிய ஓவியம் நட்சத்திரங்களை காட்சிபடுத்துகிறது. வானில் தெரியும் நட்சத்திரம் அந்த பலூனிலும் பிரதிபலிக்கிறது. இதில் உள்ள பலூன் நமது பால்ய காலத்தின் சந்தோசத்தை போலவே இருக்கிறது. பலூன்கள் நமது சந்தோசத்தின் அடையாளங்கள். அதன் அர்த்தத்தை குழந்தைகளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். வித வித மான நிறங்களில் பென்சிலை கொண்டு வரையாபட்ட இந்த ஓவியங்கள் பார்ப்பதற்கு உற்சாகமாக கலை ரசனையை அதிகரித்த படி உள்ளது. குறிப்பாக சந்தோசத்தின் அடையாளமாகவே உள்ளது அவருடைய ஓவியங்கள். விடுமுறை நாட்களில் பார்த்து பொழுது போக்குவதற்கு நல்ல ஓவியங்கள்.
insta : @innaruda
Website : https://society6.com/innaruda
Comments
Post a Comment