நமது தமிழ் பண்பாட்டின் வரலாறு...!


பண்பாட்டின் பயணம் என்ற  மறைக்கப் பட்ட தமிழக வரலாறு என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. Youtube இல் இது குறித்த எஸ். ராமகிருஷ்ணன் ஆற்றிய உரையை பார்த்தேன். இன்றைக்கு உள்ள தமிழ் நாட்டில் உள்ள நகரங்கள் எவ்வாறு உருவாகின.?  சிந்து சமவெளி நாகரீகம் எப்படி தொடங்கியது? அதற்கும் திராவிட மொழிக் குடும்பமான தமிழுக்கும் என்ன தொடர்பு அதற்கான சான்றுகள் என்று மிக முக்கியமான தகவல்களை கொண்ட உரையாகும். 
நம் அறிய தவறிய தமிழ் நாட்டி உண்மையான வரலாறு. முப்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டு ஆய்வாளராக பாலகிருஷ்ணன் அவர்கள் இதை எழுதியுள்ளார்கள் . தமிழ்நாடு பற்றி தெரிந்து கொள்ள முக்கியமான புத்தகம்.  குறிப்பாக உலகின் பழமையான மொழிகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால் அதற்க்கும் தமிழ் குடும்பத்திற்கும் என்ன தொடர்பு? உலகின் மூத்த குடி என்ற பெருமை தமிழ் மக்களுக்கு உரியதா? இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னரே சிந்து சமவெளி நாகரீகம் தோன்றிய வரலாறு மத சார்பற்ற, civilization என்று சொல்லபடுகிறது பண்பாட்டின் வளர்ச்சி எப்படி பட்டது என்பது குறித்த மிக முக்கியமான தகவல்களை சொல்கிறது. இணையத்தில் இந்த புத்தகம் விற்பனைக்கு உள்ளது. இந்திய பண்பாட்டை உருவாக்க தமிழர்களின் வாழ்வியலில் முக்கியமான சான்றுகள் உள்ளது என்பதோடு இந்தியா என்பது பன்மை தன்மை கொண்ட மத சார்பற்ற நாடு என்பதை உறுதிபடுத்த இந்த புத்தகம் எழுதப் பட்டுள்ளது என்பது வாசிக்க ஆர்வத்தை தூண்டுகிறது .

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )