நெப்போலியனை தோற்கடித்த உப்பு - 1

 இந்திய பொருளாதார வரலாறு என்ற புத்தகத்தை வாசிக்கும் பொழுது ஒரு தகவல் ஆர்வமாக இருந்தது. உலகின் மாபெரும் வீரனாக கொண்டாடப் பட்ட நெப்போலியனை பிரிட்டிஷ் அரசு எப்படி தோற்கடித்தது என்பதை பற்றியது. இந்தியாவில் விளையும் உப்பிலிருந்து ஒரு வகையான வெடி மருந்து தயாரித்து வணிகம் நடைபெற்றதை வே. மீனாட்சி சுந்தரம் குறிப்பிடுகிறார். இந்த வெடி உப்பு தயாரிப்பு குகைகள், பாறைகளில் படிந்து கிடக்கும் அழுக்கிலிருந்து தயாரிக்கப் பட்டிருக்கிறது.  பின்னர் சாணம், மூத்திரம், பறவைகள், ஓவ்வொல் ஆகியவற்றின் எச்சம், மனித கழிவு இன்னும் அழுகும் பொருட்கள் ஆகியவற்றை நீர்படாமல் ஒரு வருடமாவது மக்கவைத்து அதனை கொதி நீரில் கொதிக்க வைத்து வெடி உப்பை படிக்கங்களாக பிரித்து எடுப்பார்கள். இதனோடு வேறு சில நைட்ரேட்களும் கலப்படமாக இருக்கும். இதனால் வெடி மருந்தின் வீரியத்தை இது குறைத்து விடும். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெடி மருந்தில் கலப்படம் குறைவாக இருந்ததால் கிராக்கி அதிகம்.


1757 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிளாசிப் போரில் வெற்றி பெற்று வங்கம், பீகாரை கைப்பற்ற இந்த வெடி உப்பின் மூலம் தயாரிக்கப் பட்ட வெடி மருந்து உதவியது. ஒரு வகையில் இந்தியாவை காலணிய நாடக மாற்ற பிரிட்டிஷ் அரசிற்க்கு இது பெரும் உதவியாக இருந்தது. இந்தியாவில் இந்த உப்பை வட மாநிலங்களில் பிஹார், வங்கம் பகுதியில் விளைவிக்கப் பட்டது. னோனியா என்ற சாதியினரின் குல தொழிலாக இருந்ததாக மீனாட்சி சுந்தரம் குறிப்பிடுகிறார்.
1815ல் நெப்போலியனை வாட்டர்லூ என்ற இடத்தில் நடந்த போரில் பிரிட்டிஷ் அரசு தோற்கடித்தது. 1814ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஏழு ஆயிரம் டன் வெடி மருந்தை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்தது. இதுதான் மாவீரன் நெப்போலியன் தோற்பதற்க்கு முக்கியகாரணம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  நாம் யாரும் அறியாத இந்தியவில் மாபெரும் வளங்கள் இருந்துள்ளது. அதை உலகிலுள்ள மற்ற நாடுகள் வணிகர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் அறிந்து அதை பயன்படுத்தி வளர்ச்ச்சி அடைந்து விட்டனர். ஆனால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மூலகாரணமாக இருந்த இந்தியா இன்னும் வளரும் நாடக இருப்பது மாபெரும் துயரம். இந்த புத்தகம் மார்க்கசிய பார்வையில் காலனிய இந்தியாவின் பொருளாதார வரலாற்றிணை பதிவு செய்கிறது .

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )