செல்போன் மந்திரவாதி....!

 செல்போன் உலகத்தை உள்ளங் கைக்குள் கொண்டு வந்து விட்டது. விரும்பிய உணவு, உடை, வீட்டிற்கு தேவையான அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து வாங்கமளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. எஸ். ராமகிருஷ்ணனின் உணவு குறித்த youtube உரை ஒன்றில் எந்த தொலைகாட்சியிலாவது சோறு சாப்பிடுங்கள் என்று விளம்பரம் வருகிறதா? இல்லை எல்லாம் உடலுக்கு ருசியும் கெடுதலும் ஏற்படுத்தக் கூடிய துரித உணவுகள், கண் கவரும் உடைகள், பாலின்ப இச்சையை தூண்டும் போர்ன் வெப் சீரியஸ்கள் சமூக வலைதளங்கள் என்று அனைத்தும் நமது வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. அதே நேரத்தில் இதன் மூல காரணமாக வெளி நாட்டு சந்தைபடுத்தலும் வணிகமும் இருப்பதை நம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பம் மனிதர்களின் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அமைந்துள்ளது. போன வருடம் ஒரு முறை youtube பார்த்துக் கொண்டிருந்த போது மதுரையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வரும் ஒருவரின் கதையை பற்றிக் கேட்டேன். இது மாதிரி குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்கி வியாபாரம் செய்யும் மனிதர்களும் இந்த தொழில் நுட்ப வளர்ச்சியால் youtube இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்கள் மூலம் அடையாளப் படுத்த பட்டிருகின்றனர். மேலும் நிறைய ஆன்லைன் கோர்ஸ்கள் youtube இல் இலவசமாக கற்றுக்கொள்ளாலாம். இது மட்டுமில்லாமல் அமேசான் செயலின் இலவசமாக புத்தகங்களை விற்கலாம். இது போன்ற நல்ல செயல்களும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிரம் youtube போன்ற செயலிகள் மூலம் நடைபெறுகிறது.

வரலாறு மட்டுமே எதிர்காலத்தின் சாவி என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் மீனாட்சி சுந்தரம். உழைப்பை மட்டும் சார்ந்து கூலியாகவும் அடிமையாகவும் வாழ்கிற வரை உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தில்லை. ஆனால் சுதந்திர மனிதனாக உரிமைகளை பெற முயன்றால் ஆபத்து சூழும் என்பதை உணர்ந்ததாக சொல்கிறார். சாமானிய மனிதர்களின் உழைக்கும் மக்களின் பொருளாதார வாழ்வு அரசியலோடு தொடர்புடையது என்று குறிப்பிடு கிறார். ஐரோப்பியர்கள் வருகைக்கு முன்னரே இந்தியாவில் வேளாண் உற்பத்தியும் கூட்டு சந்தை முயற்சிகளும் நடந்துள்ளது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற வர்த்தக கொள்ளை இங்குள்ள பெரு முதலாளிகள்,  எளிய விவசாயிகளின் உற்பத்தியை முடக்கி தங்களது லாபம் சம்பாதிக்கும் உற்பத்தியை பெருக்கினர்.
இந்தியா காட்டன் அறிக்கை என்ற ஆவணத்தில் பிரிட்டிஷ் அதிகாரிக்கும் விசாரணைக் குழு அதிகாரிக்கும் இடையிலான விவாதத்தில் இந்திய விவசாயிகள் உழைப்பாளிகள் எதையும் எளிதில் சுளுவாக கற்றுக் கொள்ளும் திறமை உள்ளவர்கள். அதிலும்,
" அவர்கள் மனிதர்கள். விலங்குகளை பழக்குவது போல பழக்கம் முடியாது. அந்த வழியில் அவர்களை அழிக்க நினைத்தால் அவர்கள் பெற்ற அனுபவத்தை அழிப்பது போலாகிறது.  அதுவும் அவர்கள் மூலதனத்தை அழிக்கிறீர்கள் என்று பிரெளன் குறிப்பிடுகிறார்.

மேலும் இந்த ஆவணத்தில் இந்திய உள்நாட்டு விவசாயத்தை ஒதுக்கி விட்டு பணப்பயிர்களான பருத்தி, கரும்பு, சணல், கஞ்சா அவுரி உற்பத்திக்கு இந்திய விவசாயத்தைத் தள்ளிவிட்டு எப்படி முடக்கினார்கள் என்றும் சொல்கிறார். முக்கியமாக துணி உற்பத்தியில் தொழில் நுட்பங்கள் கை நெசவுத் தாண்டி ஏன் வளரவில்லை என்றும் 2000 டன் எடை கொண்ட பொருட்களை கப்பலில் ஏற்றி செல்லும் மரக் கலங்களை உருவாக்கும் இந்தியர்களுக்கு ஏன் கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை என்ற கேள்வி எழுப்பு கிறார்.

இந்திய பொருளாதாரம் முடங்கியதுக்கும், நமது நாட்டு அடிமைப் பட்டு கிடந்ததற்கும் வர்ணாசிரம கொள்கைகளும், மத அரசியலும், இந்திய மன்னர்களுக்குள் நடந்த உள் நாட்டு சண்டையும்தான் காரணம். அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் புரிந்து கொள்ளாமல் மூட நம்பிக்கைகள் பெருகின அல்லது தங்களது மதத்தை ஆதிக்கம் செலுத்த பிரிட்டிஷ்க்கு ஆதரவாக செயல்பட்டு தங்களது அதிகார அரசியலை இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகள் மத வாதிகள் தக்க வைத்துக் கொண்டனர். இதன் விளைவு சக மனிதனை அடிமைப் படுத்தும் தீண்டாமை, சாதிய ஏற்றத் தாழ்வுகள், 300 ஆண்டுகள் காலனிய நாடாக அடிமை பட நேர்ந்த விளைவு இவ்வளவு இன்னும் இந்தியா வளரும் நாடக மட்டுமே இருப்பதின் அவலம் .
இன்றைக்கு நுகர்வு கலாச்சாரம், நவீன வாழ்க்கை முறை பெருகி போன கார்போரேட் சமூக வாழ்க்கை என்று காலம் மாறிவிட்டது. டிஜிட்டலைசடு சொசைட்டியாக உருமாறி விட்டது ஆனாலும் இந்த தொழில் நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, வேளாண் கண்டுபிடிப்புகளும் பெருகி விட்டன. நானுறு ஆண்டுகள் முன்னர் இந்தியாவின் வளங்களையும் இந்தியா மக்களின் அறியாமையும் பயன்படுத்தி நமது நாட்டை கொள்ளை அடித்ததோடு அது குறித்து எந்த குற்ற உணர்வுமே இல்லாமல் உலக நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடாக பெருமை அடைகின்றன. இதன் உண்மையான பின்னணியை தெரிந்து கொள்வதின் மூலம் நமது நாட்டின் தோல்விக்கும் முன்னேற்றத் தடைகளையும் தெரிந்து கொள்ளவும் மறந்து போன பண்பாட்டு வாழ்வை மீட்டெடுக்கவும் முடியும்.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )