பறந்திடு தமிழா...!


காட்டாற்று வெள்ளம் சரசரவென பாய்ந்து பின்னர் ஓய்ந்து போவது போல் வீட்டுக்குள் வந்து அமர்ந்தான் தியாகு. உடலில் ஒருவகையான சோர்வும் பசியும் களைப்புமாக இருந்தான். இரண்டு நாட்கள் ஓயாமல் தொடர்ந்து தூக்கமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது கண்களுக்குள் சிவந்து போய் ஒரே நமைச்சலாக இருந்தது. மெல்ல டிவியை ஆன் செய்தான்.

" என்ன தியாகு ஏன் ஒரு மாதிரியா இருக்குற உடம்பு ஏதும் சரியில்லையா என்று செய்தி தாள் படித்துக் கொண்டிருந்த தியாகுவின் அப்பா கேட்டார். அவன் பதில் ஏதும் சொல்லாமல் தொலைக் காட்சியின் சேனல்களை மாற்றுவதுமாக இருந்தான்.

வி. ஆர் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவடைய வேண்டும் அவர்களுடைய கோரிக்கைகள் மறு பரிசீலனை செய்யப்படும் என்று செய்தியைப்பார்த்தான். வழக்கம் போலவேதான் இதையும் சொன்னார்கள். போனதடவை போராட்டம் நடைபெற்ற போது பொய் காரணங்களை கூறி தடை செய்தார்கள் . உண்மையான போராட்டத்திற்கு மதிப்பே இல்லையா என்று ஆதங்கம்மாக இருந்தது. டிவியில் பேசிக் கொண்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளரின் பேச்சு அவனுக்கு எரிச்சலை ஏற்படத்தியிருக்க வேண்டும். இந்த முறையும் மாணவர்கள் போராட்டம் தோல்வியில் முடிந்தது என்று புலம்பினான்.

இப்போல்லாம் நீ ரொம்ப மாறிட்ட வீடுன்னு ஒன்னு இருக்குனு உனக்கு நினைவே இல்ல என்று அவன் அப்பா புலம்பினார். போராட்டம் தோல்வியில் முடிந்த விரக்தியில் அப்பா பேசுவதை கூட பொருட்படுத்தாதவனாய் எழுந்து மறுபடியும் வெளியே சென்று விட்டான்.

கல்லூரி முடித்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது இன்னும் பொறுப்பாக வேலைக்கு செல்லாமல் சமூக சேவை போராட்டம் என்று தியாகு சுற்றிக் கொண்டிருக்கிறான். இவனுக்கு பின்னால் இரண்டு தங்கைகள் வேறு உள்ளனர். அவர்களை கரை சேர்க்க வேண்டும். படிக்க வைத்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் அது குறித்து அக்கறையே இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறானே இன்னும் சில மாதங்களில் தான் ரிட்டைர் ஆகி விடுவோம் அதன் பிறகு இந்த குடும்பத்தை யார் பொறுப்பாக கவனிப்பார்கள் என்று அவருக்கு கவலையாக இருந்தது. இவனை இப்படியே விட கூடாது கூடிய சீக்கிரம் எதாவது வேலை வாங்கித் தந்தே தீர வேண்டும். இங்கே இருந்தால் இப்படியே சுற்றிக் கொண்டிருப்பான் . வெளி நாட்டில் தனது தம்பியிடம் சொல்லி இவனுக்கு எதாவது வேலை வாங்கி தர சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இது குறித்து பேசியதில் அவர் தம்பியும் வேலை தயாராகி விட்டது. அவன் மேலும் படித்துக் கொண்டே கூட வேலை பார்க்கலாம் என்ற சந்தோசமான விஷயத்தை சொன்னார். தியாகுவின் அப்பாவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அவனுக்கு ஒரு நல்ல வழி பிறந்து விட்டது என்று கடவுளை வேண்டிக் கொண்டார் .
தியாகு நூலகத்தில் இருந்து வந்ததும் அவனிடம் பேசி இன்றைக்கு முடிவெடுத்தே ஆக வேண்டும் என்ற உறுதியில் இருந்தார். தியாகு முதுகலை பட்ட படிப்பில் தேறியவன். பல்கலை கழகத்திலேயே முதன் மாணவனாய் வந்ததால் அவனுக்கு பல வேலை வாய்ப்புகளை நிறுவனங்கள் வழங்கின. ஆனாலும் அதை எல்லாம் ஒதுக்கி விட்டு சமூக சேவை செய்வது போராட்டம் நடத்துவது இயற்கை சுற்று சூழல்களை பராமரிப்பது மருத்துவம் கல்வி, வேலை வாய்ப்புகளை அனைத்து மக்களுக்கும் சம அளவில் ஏற்படுத்தி கொடுப்பது என்ற லட்சியத்தோடு வாழ ஆரம்பித்தான்

  "பறந்திடு தமிழா " என்ற அமைப்பை உருவாக்கி பொது மக்களிடம் இருந்து நிதி திரட்டி மக்கள் சேவை மையத்தை உருவாக்கி போராட்டத்தில் ஈடுபடுவது, என்று அவன் இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டது. ஆனால் குடும்பத்தை பற்றி நினைக்கவே மறந்து போனான். அதுவே அவன் அப்பாவிற்கு பெரும் கவலையாக இருந்தது . அவன் குடும்பத்தை பற்றியும் கொஞ்சமாவது அக்கறை காட்ட வேண்டும் என்றுதான் அவர் நினைத்தார்.
போன முறை இது குறித்து அவனிடம் பேசி சண்டையிட்டார். இந்த மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து கொண்டு அவருக்கு காச நோய் வந்து விட்டது. அந்த நோய் தீர்ந்த பாடில்லை. அப்பாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவனாக சொந்தமாக தொழில் தொடங்க முடிவெடுத்தான். பல நிறுவனங்களில் வேலை பார்த்து அங்குள்ள அரசியல் ஊழல் காரணமாக அவன் சண்டையிட்டதால் அவனை அனைத்து கம்பெனிகளும் வேலையை விட்டு நீக்கி விட்டன. உலகில் தன்னால் சம்பாதிக்க முடியாது சேவை செய்து வாழ்வது மட்டுமே தனக்கு மன நிறைவை தரும் என்று ஆழமாக நம்பினான்.

தியாகு லைப்ரேரியிலிருந்து திரும்பியதும் இரவு ஒன்பது மணி ஆகிஇருந்தது. அவன் தங்கைகள் படித்துக் கொண்டிருந்தனர். அவன் அப்பாவும் மார்க்கசியம் பற்றி தீவிரமாக படித்துக் கொண்டிருந்தார். அவன் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்தார்.
அவன் படுக்கை அறைக்கு போனதும் அவரும் பின்னால் சென்று அறை கதவை தாழிட்டுக் கொண்டார் .

உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே நாங்க வாழறதா வேணாமா சொல்லு என்றார்.

அவன் சட்டையை கழற்றி தூக்கி எறிந்தவனாக அவரை முறைத்தான்.

ஏம்ப்பா வீட்டுக்கு வந்த உடனே ஆரம்பிக் கிறீங்க என்ன தான் பிரச்னை உங்களுக்கு என்றான்.

உனக்கு அப்புறம் ரெண்டு தங்கைகள் இருக்காங்க அவங்க மேல உனக்கு துளி அக்கறைவும் இல்லியா என்று கேட்டார்.

எனக்கு தெரியும்ம்ப நா பாத்துக்குறேன் நீங்க எதுக்கு இப்படி தேவை இல்லாமல் பயபடுறீங்க என்று பதில் சொன்னான்.

நீ பாத்துப்ப நான் நம்புறேன். ஆனால் நீ நிலையான வேலை வருமானம் எதுவும் இல்லாமல் இப்படி நாட்டுக்கு நல்லது பண்றது அப்படினு அலைஞ்சிக் கிட்டு இருக்கியே அதனாலதான் நா சொல்றேன்.

என்னால வேறெந்த வேலைக்கு போக முடியலப்பா நாட்டுல நடக்குற முறைகெடுகள், அரசியல், பணத்தாசை, வெறுப்பரசியல் இதை எல்லாம் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியல அப்பா என்றான். 

ஒரே நாள்ள ஒட்டு மொத்த உலகத்தையும் திருத்த முடியாது தியாகு அதுக்கு உனக்கு அதிகாரம் வெனும், அப்டினா நீ பெரிய அரசியல் வாதியா மாறனும் ஆனால் இப்ப நம்ம இருக்குற வீட்டு சூழ்நிலையை நினைச்சு பாரு என்றார்.

அவன் முகம் வெறுப்பாக இருந்தது. இந்த வாழ்க்கையில் தன்னால் எந்த மாற்றத்தையும் உண்டாக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வு அவனை வாட்டி வதைத்தது. அவனை அறியாமல் கண்ணீர் வடித்தான். நெடு நேரமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவன் அப்பா மெதுவாக சொன்னார்:

உன்ன கஷ்டபடுத்தனும்னு சொல்லலப்பா நம்ம குடும்பத்தோட நிலைமையை புரிஞ்சிக்கோப்பா நாளைக்கு உனக்கு ஒரு எதிர்காலம் இருக்குல்ல என்றார்.

அவன் உச்ச கட்ட வெறுப்பில் கண்களை மூடிக் கைகளை தலைக்கு மேலாக வைத்துக் கொண்டு படுத்திருந்தான்.

அன்றைக்கு இரவு யாரும் உறங்கவில்லை. அவன் அப்பா அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து நெஞ்சு வலி என்று கத்தினார். தியாகு பதறி யடித்துக் கொண்டு எழுந்தான். உடனே ஆட்டோ பிடித்துகொண்டு போய் ஆஸ்பிட்டலில் சேர்த்தான். பரி சோதனை செய்து ஸ்கேன் எல்லாம் எடுத்து முடித்து வீட்டிற்கு வந்ததும் அவரை அறையில் போய் படுக்க வைத்தான். அவர் காய்ச்சல் வந்த குழந்தையை போல படுத்து அயர்ந்து போயிருந்தார் .

அப்பாக்கு என்னயாயிற்று என்று பல முறை கேட்டும் அவன் எதுவும் சொல்லவில்லை. சாதாரண வாய்வு கோளாறுதான். எல்லாம் சரியாயிடும் என்று அவர்களுக்கு சமாதானம் சொன்னான். ஆனால் உண்மையில் இது அவருக்கு மாரடைப்பு இரண்டாம் முறை வந்துருக்கிறது அவரை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் மென மருத்துவர்கள் சொன்னார்கள். பத்து வயதிலேயே அவன் அம்மாவை இழந்து விட்டான். அவனையும் தங்கைகளையும் அப்பாதான் வளர்த்தார். அலுவலகம் முடிந்து வந்ததும் இரவு ஹோட்டல் வைத்து நடத்திதான் அவனை படிக்க வைத்தார். இன்னும் தங்கைகள் கல்யாணம் அடைக்க வேண்டிய கடன் என்று இந்த வாழ்க்கையில் லட்சியத்திற்காக வாழ்கிறவனுக்கு எத்தனை தடைகள். இலட்சியத்தை அடைந்த சாதித்த அனைவருக்கும் இந்த மாதிரி கவலைகள் துன்பங்கள் வந்திருக்குமா இல்லை எனக்கு மட்டும் இதெல்லாம் நடக்கிறதா என்று ஆற்றாமையாக இருந்தது. அப்பா சொல்வதும் சரிதான். முதலில் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் . தனிமனித முன்னேற்றம்தான் குடும்பம், சமூகம், உலகம் என அனைத்து முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு ஆதாரம். நாம் நினைப்பதை சாதிக்க வேண்டுமென்றால் அதிகாரம் பலமும் வேண்டும். அதற்கு அரசியல் மட்டுமே ஒரே தீர்வு. என்று முடிவெடுத்துக் கொண்டான். குடும்பத்தின் முன்னேற்றத்திற்க்காகவும் அப்பாவின் ஆசையையும் நிறை வேற்றவும் சில ஆண்டுகள் தனது லட்சியத்தை தியாகம் செய்யத்தான் வேண்டும் என்று நினைத்தான் . வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்தான்.

அறுவை சிகிச்சை முடிந்து அவன் அப்பா தங்கைகள் வழியனுப்ப அவன் விமானம் கிளம்பியது. சொந்த நாட்டை விட்டு பணத்திற்காக இப்படி வெளி நாட்டிற்கு போகிறோமே என்று குற்ற உணர்ச்சியின் வலி அவனை மனதை அரிக்க ஆரம்பித்தது. தனது லட்சியம் கனவு எல்லாம் மறைந்து போவதாக நினைத்தான். அப்பா அவனுக்கு ஸ்டீல் வாட்ச் ஒன்றை பரிசளித்தார். அதன் பின்னால் அவனுக்கு ஆதர்சமான அம்பேத்கர் படம் ஒட்டப்பட்டிருந்தது.

ஆறு மாதங்கள் கழித்து வீட்டிற்கு போன் செய்திருந்தான். வேலை பழகி விட்டதாகவும். இன்னும் ஆறு மாதங்கள் கழித்து விடுப்பு இருக்கும் எனவும் தான் வருவதாகவும் சொன்னான். இந்த ஆறு மாதங்கள் அவன் சம்பாதித்து அனுப்பிய பணத்தை அவன் அப்பா கடன் அடைத்தார். இரண்டு மகள்களுக்கும் நகை வாங்கி சேர்த்து வைத்தார். அவன் பேரில் கொஞ்சம் பணத்தை போட்டு வைத்திருப்பதாக தங்கை போனில் சொன்னாள்.

அப்பாவிடம் போனை கொடுக்குமாரு கேட்டான். ஆனால் அவர் வெளியே போயிருந்தார்.
அவன் கேட்டாதுக்கு போராட்டம் என்று சொல்லி விட்டு போனார். என்றாள்.

அவர் எந்த போராட்டத்தில் கலந்து கொள்ள போறாரு என்று கேட்டான்.

நீ ஆரம்பித்த பறந்திடு தமிழா என்ற அமைப்பை அவர்தான் இப்போது வழி நடந்துகிறார். வாரம் தோறும் நம் வீட்டுலதான் கூட்டம் நடக்கும் இன்னும் நிறைய சமூக பணிகள் செய்ய திட்ட மிடப்பட்டிருப்பதாக சொன்னாள்.(Zoom ) மீட்டிங் இணைய தளத்தில் அவன் அப்பா தியாகு பறந்திடு தமிழா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் வாரம் ஒரு முறை கூட்டம் நடத்தி இலக்கியம், சமூகம், அரசியல், அரசியல் பொருளாதாரம் குறித்து உரையாடுவார்கள். ஒவ்வொரு மாதமும் மது விலக்கு மற்றும் மரம் வளர்ப்பு, பள்ளி மாணவர்களிடையே சிறு சேமிப்பு போன்ற விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள். தியாகுவின் அப்பாதான் இதை முன்னின்று நடத்தினார். அவனுக்கு அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை. அப்பாவை நினைத்து பெருமையாக இருந்தது. தனக்காகத்தான், இந்த வயதான காலத்திலும் மகனின் இலட்சியத்தை தான் முன்னின்று நடத்துகிறார். அப்பாவின் மூலம் தனது சமூக சேவை தொடர்வது அவனுக்கு நிம்மதியாகவும் அதே நேரத்தில் அவன் தந்தையை நினைத்து பெருமையாகவும் இருந்தது.  

G . கோபி
22-6-23, 07:44AM

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )