அம்மா, அப்பா, நண்பர்கள் மற்றும் புத்தகங்களுக்கு நன்றி..... ✍️

883,612,800 வினாடிகள் வாழ்ந்திருக்கிறேன். கால்குலெட்டரில் போட்டு பார்த்தேன். ஆச்சர்யமாக இருக்கிறது. சந்தோசத்தை விட வாழ்க்கை அதிகம் வேதனையை மட்டுமே தந்திருக்கிறது. புத்தகமும் குடும்பமும் நல்ல நண்பர்களும் தான் ஒரே  எனது நம்பிக்கை . காலையில் செல்மா லாகர் லெவ்வின் மதகுரு நாவல் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்றைக்கு எப்போதும் போலவே நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். முதல் வாழ்த்து அக்கா அம்மா உடையதுதான். ஊரில் இருந்து அத்தை வாழ்த்துக்கள் கூறினார்கள். பிறந்தநாள் அன்றைக்கு விடுமுறை வருவது கூடுதல் சந்தோசம் . பிறந்தநாள் கொண்டாடுவதில் எல்லாம் விருப்பம் இல்லை. ஆனால் நண்பர்கள் வாழ்த்துக்கள் சொல்வது மட்டுமே ஒரே சந்தோசம். HCL லில்  வேலை பார்த்த போது நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். என் வாழ்க்கையில் முதல் கேக் அதுதான். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


 காலையில் எழுந்து அறையை சுத்தம் செய்தேன். துணி துவைத்தேன் . மதியம் வரை உறங்கினேன். மாலையில் பீச்சுக்கு தனியாக போயிருந்தேன். தனிமையை விட சுகம் எதுவுமில்லை. ஆனால் வலியும் அதிகம். அவ்வளவுதான். பிறந்தநாள் முடிந்தது. எனது பிறந்தநாளில் நிறைய குழப்படிகள் உள்ளதால் நண்பர்கள் நிறைய பேருக்கு எனது பிறந்தநாள் பற்றி தெரியாது. மற்ற படி பேஸ்புக்கில் வாட்ஸாப்ப்பில் வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்களுக்கு அன்பும் நன்றியும். இந்த வாழ்க்கையை நல்ல கல்வியை, உணவை நல்ல மனதையும் ஒழுக்கத்தையும் கொடுத்த அம்மா அப்பாவிற்கு என்றென்றும் அன்பும் நன்றியும்....

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )