மட்டன் செல்பி

மட்டன் குறும்படத்தில் ஒவ்வொரு காட்சியும் நிதானமாக படமாக்கப் பட்டிருக்கிறது. ஆட்டு உரிமையாளர் எந்த வசனமும் இல்லாமல் நடித்திருப்பது யதார்த்தமான நடிப்பு. இறுதிக் கட்ட காட்சிதான் மனதை வெகுவாக உருக்கிவிட்டது. அன்றாடம் ஹோட்டல்களில் சாப்பிடுகிற யூடுப் போன்ற உணவு விளம்பர படுத்துகிற காட்சிகள், உணவு ரசனை குறித்த தனிநபர் இன்ஸ்டாகிராம் பதிவுகள், உணவு குறித்து நம்முடன் இருக்கும் ரசனை சார்ந்த பேச்சுக்கள் போது கூட அதை வளர்த்தவர்களின் கதையை நாம் பேசயிருப்போமா? என்று தெரியாது . ருசிக்காக நாம் சாப்பிடும் மட்டன் அசைவ உணவின் பின்னால் அதை வளர்த்தவர்களின் அன்பும் பாசமும் கலந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  இன்னொரு காட்சியில் வளர்த்த மகள் இன்னொருவரை காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டதாக மனைவி அழும் காட்சியில் அவள் கணவன் சந்தோஷப்பட்டு உணர்வை வெளிப்படுத்தும் விதம் அற்புதமான சிந்தனை. இங்கே அவருக்கு தன் மகள் காதலித்து இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதை எளிதாக ஏற்றுக்கொள்ளும் தந்தை ஒருபுறமும், கறிக்கடையில் தன் வளர்த்த ஆட்டை திரும்ப காப்பாற்ற ஓடி போகும் பாசமான தந்தை ஒரு விதமாக எடுக்கப் பட்ட காட்சியமைப்பு சிறப்பானது. மனைவி அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு மகள் காதலித்து கல்யாணம் செய்து கொள்வது ஒன்றும் அவ்வளவு மோசமான செயல் இல்லையே? தன் வளர்த்த ஆட்டை வெட்டுவதை ஒன்றும் கொடுமையான விஷயம் இல்லை. இறுதிக் காட்சியில் கறிக் கடையில் ஒரு ஆட்டை அறுத்துத் தொல் உறிக்கும் காட்சி மிக உண்மையாக எடுக்கப் பட்டிருப்பது இன்னும் முக்கியமானது. இதுவரை நான் பார்த்த திரைப்படங்களில் ஒரு கறிக் கடையில் கறி வெட்டுகிற காட்சியை முழுமையாக பார்த்ததில்லை. அதை முழுவதும் காட்சி படுத்தியது முக்கியமான பதிவு. ஆடு வளர்த்தவர் ஆட்டோடு எடுக்கும் கற்பனையான செல்பி, படம், ஆற்றில் மீன் பிடிக்கும் காட்சி, போன்ற காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.  எளிமையாக, அளவான வசனங்கள்,  கருத்துள்ள திரைக் கதை என்று நல்ல குறும்படத்தை எடுத்த கணே ரமேஷ்க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அன்பும் நன்றியும்.

குறும்படம் பார்க்க


G. கோபி 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )