நெருப்பு பேனா - 1
அம்பேத்கரின் பேனா நெருப்பை உண்டாக்கக் கூடியது. அந்த நெருப்பில் சாதி எனும் குப்பை எரிந்து சாம்பலாகத்தான் போகும். இந்த புத்தகம் படிக்கையில் அப்படி ஒரு நெருப்பை உணர முடிந்தது.
மத்திய பிரதேசத்தில்லுள்ள " மோ " என்ற இடத்தில் 1819 ஏப்ரல் திங்கள் 14 ம் நாள் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்தார். மகாராஸ்டிராவிலுள்ள கொங்கன் பகுதியில் அம்பேத்கரின் மூதாதையர்கள் தோன்றினர். அவர்களுடைய பூர்வீக கிராமத்தின் பெயர் " அம்பவேத" ரத்னகிரி மாவட்டத்தில் உள்ளது. " மகர் " எனும் பிரிவில் அம்பேத்கர் பிறந்தார். அழிவிலிருந்து மீண்டு எழும் தன்மை, சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வினை மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை ஆகியவற்றில் மிக முன்னேறியதாகவும் பலம் பொருந்தியதுமாகும். இந்த மகர் இனத்தில் பிறந்த குழந்தை நல்ல எதிர்க்கும் குணம் வாய்ந்ததாகவும் நுட்பமாக செயலை முடிக்கும் குணம் கொண்டதாகவும், தனக்கு இழைக்கும் அவமானங்களை பொறுத்து கொள்ள முடியாது எதிர்க்கும் குணம் கொண்டதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அம்பேத்கர் அப்படியான மாவீரர்தான். ராம்ஜி மற்றும் பீம்பாய் இவரது பெற்றோர்களின் பெயர். அவருடைய பெற்றோர்கள் ராணுவ குடும்ப பின்னணியில் தோன்றியவர்கள்.
மனிதர்கள் ஏதேனும் சமய நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது என்பது அம்பேத்கர் வாழ்நாள் முழுவதும் கொண்ட திட நம்பிக்கையாகும். அம்பேத்கர் மற்றும் அவரது குடும்பம் கபீர்பந்த்தின் சிந்தனையிலும் தத்துவங்களிலும் நம்பிக்கை கொண்டிருந்த குடும்பம். கபீர் இறைவனின் முன்பு அனைவரும் சமம் என்றும் சாதிக்கு எதிராக இயக்கம் நடத்தியவரும் ஆவார் என்பதை இங்கு நினைவு கூர்தல் சாலச் சிறந்தது. அங்குள்ள மராத்தி பள்ளியில் பள்ளி படிப்பையும் , 1900ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளிப் படிப்பையும் முடித்தார். பள்ளி பதிவேட்டில் அவருடைய பெயர், " பீமா ராம்ஜி அம்பாவேடகர். இயற்பெயர் : சக்பால்.
பள்ளி படிக்கையில் சாதி மற்றும் தீண்டாமையால் மிகுந்த அளவில் பாதிக்க பட்டார். அதனால் அவர் விரும்பிய மொழிகளை அவரால் கற்க முடியாமல் போனது.
1904ல் அம்பேத்கரின் குடும்பம் பம்பாய்க்கு குடியேறியது. தங்குவதற்கு
வீடில்லாமல் பரேலில் பல குடிந்தனங்கள் கொண்ட கொண்ட ஒரு வீட்டில் அறையை வாடகை வீடாக அமர்த்திக் கொண்டனர். பெரிய மாவரைக்கும் கல்லுக்கும் பெண் வெள்ளாட்டுக்கும் இடம் கிடைக்காமல் அல்லல் பட்டார்கள். அங்குள்ள உயர்நிலை பள்ளியில் 1907இல் மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார். இந்த வெற்றிக்காக அவருக்கு புத்தரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகம் சத்யசோதச் சீர்திருத்த இயக்கத்தின் தலைவரான எஸ். கே. போலேவின் தலைமையில் ஏற்ற முறையில் கொண்டாடபட்டது . அடுத்து தனது பதினான்காம் வயதில் "ராமாபாய்" என்ற பெண்ணை மணம் புரிந்து கொண்டார்.
பரோடாவின் மன்னர் மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாடால் அளிக்கபெற்ற மாத உதவித் தொகையான இருபந்தைந்து ருபாய் பணத்தை வைத்துக் கொண்டு எல்பின்ஸ்டன் கல்லூரியில் படிப்பை தொடர்ந்தார். அங்குள்ள பேராசிரியர் முல்லர் அவருக்கு பல புத்தங்கங்கள் கொடுத்து உதவினார். ஆனால் பம்பாய் போன்ற பெரு நகரங்களிலும் அவர் தீண்டாமை கொடுமையால் பாதிக்க பட்டார். உணவகங்களில் தேனீர், நீர் மறுக்கப் பட்டன. 1913இல் ஆங்கிலம் பாரசீகம் ஆகியவற்றில் பி. ஏ தேறினார். அந்தாண்டு அவர் மீது அன்பு கொண்ட தந்தையும் காலமானார்.
கல்லூரி படிப்பை முடித்த பிறகு பரோடா அரசில் பணியேற்றுக் கொண்டார். ஆனால் அந்த காலகட்டத்தில் உயர் குடிக்கும் மட்டுமே அரசு பணிகள் கிடைக்கும் என்று இருந்த நிலையில் அவருக்கு அந்த பணி கிடைத்தும் அவர் அங்கும் அவர் கீழ்நிலை பணியாட்களால் அவமானபடுத்த பட்டார். சாதிய, தீண்டாமை கொடுமைகள் படித்தவர்களிடம் அதிகம் இருந்தது வேதனையான விஷயம். அங்குள்ள பணியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார். அடுத்து நியுயார்க்கிலுள்ள கோலம்பிய பல்கலை கழகத்தில் மேற்படிப்பை நிறைவு செய்தார். 1913 ஜூன் மாதம் அரசாங்கத்தில் பணியாற்ற உடன்படிக்கை செய்து கொண்டார். அவர் பிறந்த குடும்ப சமுதாயத்தில் வெளி நாடு சென்று மேல் படிப்பு படித்த முதல் மனிதர் என்ற பெருமை அவருக்கு இருந்தது. குறிப்பாக கொலம்பியாவில் அவர் எந்த அவமானமோ தீண்டாமை கொடுமையோ அடைய வில்லை என்பது குறிப்பிட தக்கது. அம்பேத்கர் ஒரு நாளில் 18 மணி நேரம் படிப்பிற்க்காக செலவு செய்தார்.
பண்டைய இந்திய வாணிகத்தைப் பற்றிய பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதிய அம்பேத்கர் தனது எம். ஏ பட்டத்தை நிறைவு செய்தார் . 1916 ஜூலை மாதம் " பிரிட்டிஷ் இந்தியாவின் மாநில நிதியின் உயர் வளர்ச்சி " என்ற தலைப்புடன் இந்தியாவிற்கான தேசிய லாபப் பங்கு ஒரு வரலாற்று பகுப்பாராய்வு என்ற ஆய்வு கட்டுரை எழுதி தனது முனைவர் பட்டம் பெற்றார் . லண்டன் சென்று இக்ரே இன் என்ற சட்டக் கல்லூரியில் சேர்ந்து பார் அட்லா வில் தகுதி பெற்றார். உதவி தொகை இல்லாமல் ஒரு வருடம் வேலை பார்த்துக் கொண்டே கஷ்ட்டப்பட்டு படித்தார் . செளிக்மேன், கானன், சிட்னிவெப் போன்ற பேராசிரியர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர். வெளிநாடுகளில் படித்து பட்டம் பெற்று வந்தாலும் இந்தியாவில் அவர் அடைந்த அவமானமும் கொடுமையும் அதிகம். இந்தியாவில் அவரை சாதியக் காரணங்களால் இழிவு படுத்தினர். அவர் வேலை செய்த இடத்தில் பணியாளர்கள் அவர் மீது பேப்பரை தூக்கி எறிந்தனர். விடுதியில் தங்குவதற்கும் குடிக்க தண்ணீர் கூட அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. வெளி நாட்டில் படித்து இந்தியா வந்த வேறெந்த பட்டதாரிக்கும் இந்த அவமானம் நடந்திருக்காது. அம்பேத்கருக்கு மட்டும் ஏன் நடக்க வேண்டும்? அம்பேத்கர் கண்ணீர் வடித்தார். மனதிற்குள் வேதனை பட்டார். ஒரு கல்வி அறிஞருக்கு உலகில் வேறெந்த நாட்டிலும் இப்படி ஒரு கொடுமை நடந்திருக்காது. இனி வரும் காலங்களில் இனிமேலாவது சாதி என்ற பெயரில் மனிதர்களுக்கு நேரும் அவமானம் தடுக்கப் பட வேண்டும். ஆனால் அது கல்வியின் மூலம் நடக்க வேண்டும். அதுதான் அம்பேத்கருக்கு நாம் செய்கிற மரியாதையும் நன்றியும்.
அம்பேத்கர் தனது முயற்சியை கைவிட வில்லை. தனது நுட்பமான அறிவை பயன்படுத்தி புத்தகங்கள் எழுதினார். இந்தியாவின் சிறு குத்தகை நிலங்களும் அதன் தீர்வுகளும் என்ற புத்தகம் வெளியிட்டார். தனியே அமைப்பை உருவாக்கி மாணவர்களுக்கு கல்வி அளித்தார். 1918 சைடனம் என்ற கல்லூரியில் அரசியல் பொருளாதார பேராசிரியர் பதவி அடைந்தார் . ஆனால் அப்போது கூட சக ஆசிரியர்கள் பருகும் பானையில் தண்ணீர் குடிக்க அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. 1920 மார்ச்சில் லண்டன் சென்று பொருளாதார சட்டக் கல்வியை தொடர்ந்தார் . அம்பேத்கர் வாழ்வில் கல்வி மட்டுமே அவருக்கான ஒரே ஆயுதமாக இருந்தது. அவர் மனித ஏற்றத்தாழ்வுகளை களைய தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தார்
பாபாசாகிப் அம்பேத்கர் மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து விளக்கும் எளிய புத்தகம். சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது. இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற புத்தக வரிசையில் அம்பேத்கர் பற்றிய வாழ்க்கையின் சிறு குறிப்புகளை விவரிக்க கூடியதாகவுள்ளது. ஆங்கிலத்தில் கே. ராகவேந்திர ராவ் எழுதிய புத்தகத்தை தமிழில் அரு. மருததுரை எழுதி வெளியிடப் பட்டுள்ளது. விலை. 50ரூபாய் மட்டுமே. அம்பேத்கரின் சமூக கொள்கைகள், அரசியல் மற்றும் சட்டக் கொள்கைகள் பொருளியல் பற்றிய சிந்தனைகள் மற்றும் அவருடைய பௌத்தம் குறித்த சமய விளக்கங்கள் என்று அனைத்தையும் பற்றிய சுருக்கமான எளிய கட்டுரைகள் கொண்ட புத்தகம்.
மத்திய பிரதேசத்தில்லுள்ள " மோ " என்ற இடத்தில் 1819 ஏப்ரல் திங்கள் 14 ம் நாள் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்தார். மகாராஸ்டிராவிலுள்ள கொங்கன் பகுதியில் அம்பேத்கரின் மூதாதையர்கள் தோன்றினர். அவர்களுடைய பூர்வீக கிராமத்தின் பெயர் " அம்பவேத" ரத்னகிரி மாவட்டத்தில் உள்ளது. " மகர் " எனும் பிரிவில் அம்பேத்கர் பிறந்தார். அழிவிலிருந்து மீண்டு எழும் தன்மை, சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வினை மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை ஆகியவற்றில் மிக முன்னேறியதாகவும் பலம் பொருந்தியதுமாகும். இந்த மகர் இனத்தில் பிறந்த குழந்தை நல்ல எதிர்க்கும் குணம் வாய்ந்ததாகவும் நுட்பமாக செயலை முடிக்கும் குணம் கொண்டதாகவும், தனக்கு இழைக்கும் அவமானங்களை பொறுத்து கொள்ள முடியாது எதிர்க்கும் குணம் கொண்டதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அம்பேத்கர் அப்படியான மாவீரர்தான். ராம்ஜி மற்றும் பீம்பாய் இவரது பெற்றோர்களின் பெயர். அவருடைய பெற்றோர்கள் ராணுவ குடும்ப பின்னணியில் தோன்றியவர்கள்.
மனிதர்கள் ஏதேனும் சமய நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது என்பது அம்பேத்கர் வாழ்நாள் முழுவதும் கொண்ட திட நம்பிக்கையாகும். அம்பேத்கர் மற்றும் அவரது குடும்பம் கபீர்பந்த்தின் சிந்தனையிலும் தத்துவங்களிலும் நம்பிக்கை கொண்டிருந்த குடும்பம். கபீர் இறைவனின் முன்பு அனைவரும் சமம் என்றும் சாதிக்கு எதிராக இயக்கம் நடத்தியவரும் ஆவார் என்பதை இங்கு நினைவு கூர்தல் சாலச் சிறந்தது. அங்குள்ள மராத்தி பள்ளியில் பள்ளி படிப்பையும் , 1900ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளிப் படிப்பையும் முடித்தார். பள்ளி பதிவேட்டில் அவருடைய பெயர், " பீமா ராம்ஜி அம்பாவேடகர். இயற்பெயர் : சக்பால்.
பள்ளி படிக்கையில் சாதி மற்றும் தீண்டாமையால் மிகுந்த அளவில் பாதிக்க பட்டார். அதனால் அவர் விரும்பிய மொழிகளை அவரால் கற்க முடியாமல் போனது.
1904ல் அம்பேத்கரின் குடும்பம் பம்பாய்க்கு குடியேறியது. தங்குவதற்கு
வீடில்லாமல் பரேலில் பல குடிந்தனங்கள் கொண்ட கொண்ட ஒரு வீட்டில் அறையை வாடகை வீடாக அமர்த்திக் கொண்டனர். பெரிய மாவரைக்கும் கல்லுக்கும் பெண் வெள்ளாட்டுக்கும் இடம் கிடைக்காமல் அல்லல் பட்டார்கள். அங்குள்ள உயர்நிலை பள்ளியில் 1907இல் மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார். இந்த வெற்றிக்காக அவருக்கு புத்தரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகம் சத்யசோதச் சீர்திருத்த இயக்கத்தின் தலைவரான எஸ். கே. போலேவின் தலைமையில் ஏற்ற முறையில் கொண்டாடபட்டது . அடுத்து தனது பதினான்காம் வயதில் "ராமாபாய்" என்ற பெண்ணை மணம் புரிந்து கொண்டார்.
பரோடாவின் மன்னர் மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாடால் அளிக்கபெற்ற மாத உதவித் தொகையான இருபந்தைந்து ருபாய் பணத்தை வைத்துக் கொண்டு எல்பின்ஸ்டன் கல்லூரியில் படிப்பை தொடர்ந்தார். அங்குள்ள பேராசிரியர் முல்லர் அவருக்கு பல புத்தங்கங்கள் கொடுத்து உதவினார். ஆனால் பம்பாய் போன்ற பெரு நகரங்களிலும் அவர் தீண்டாமை கொடுமையால் பாதிக்க பட்டார். உணவகங்களில் தேனீர், நீர் மறுக்கப் பட்டன. 1913இல் ஆங்கிலம் பாரசீகம் ஆகியவற்றில் பி. ஏ தேறினார். அந்தாண்டு அவர் மீது அன்பு கொண்ட தந்தையும் காலமானார்.
கல்லூரி படிப்பை முடித்த பிறகு பரோடா அரசில் பணியேற்றுக் கொண்டார். ஆனால் அந்த காலகட்டத்தில் உயர் குடிக்கும் மட்டுமே அரசு பணிகள் கிடைக்கும் என்று இருந்த நிலையில் அவருக்கு அந்த பணி கிடைத்தும் அவர் அங்கும் அவர் கீழ்நிலை பணியாட்களால் அவமானபடுத்த பட்டார். சாதிய, தீண்டாமை கொடுமைகள் படித்தவர்களிடம் அதிகம் இருந்தது வேதனையான விஷயம். அங்குள்ள பணியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார். அடுத்து நியுயார்க்கிலுள்ள கோலம்பிய பல்கலை கழகத்தில் மேற்படிப்பை நிறைவு செய்தார். 1913 ஜூன் மாதம் அரசாங்கத்தில் பணியாற்ற உடன்படிக்கை செய்து கொண்டார். அவர் பிறந்த குடும்ப சமுதாயத்தில் வெளி நாடு சென்று மேல் படிப்பு படித்த முதல் மனிதர் என்ற பெருமை அவருக்கு இருந்தது. குறிப்பாக கொலம்பியாவில் அவர் எந்த அவமானமோ தீண்டாமை கொடுமையோ அடைய வில்லை என்பது குறிப்பிட தக்கது. அம்பேத்கர் ஒரு நாளில் 18 மணி நேரம் படிப்பிற்க்காக செலவு செய்தார்.
பண்டைய இந்திய வாணிகத்தைப் பற்றிய பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதிய அம்பேத்கர் தனது எம். ஏ பட்டத்தை நிறைவு செய்தார் . 1916 ஜூலை மாதம் " பிரிட்டிஷ் இந்தியாவின் மாநில நிதியின் உயர் வளர்ச்சி " என்ற தலைப்புடன் இந்தியாவிற்கான தேசிய லாபப் பங்கு ஒரு வரலாற்று பகுப்பாராய்வு என்ற ஆய்வு கட்டுரை எழுதி தனது முனைவர் பட்டம் பெற்றார் . லண்டன் சென்று இக்ரே இன் என்ற சட்டக் கல்லூரியில் சேர்ந்து பார் அட்லா வில் தகுதி பெற்றார். உதவி தொகை இல்லாமல் ஒரு வருடம் வேலை பார்த்துக் கொண்டே கஷ்ட்டப்பட்டு படித்தார் . செளிக்மேன், கானன், சிட்னிவெப் போன்ற பேராசிரியர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர். வெளிநாடுகளில் படித்து பட்டம் பெற்று வந்தாலும் இந்தியாவில் அவர் அடைந்த அவமானமும் கொடுமையும் அதிகம். இந்தியாவில் அவரை சாதியக் காரணங்களால் இழிவு படுத்தினர். அவர் வேலை செய்த இடத்தில் பணியாளர்கள் அவர் மீது பேப்பரை தூக்கி எறிந்தனர். விடுதியில் தங்குவதற்கும் குடிக்க தண்ணீர் கூட அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. வெளி நாட்டில் படித்து இந்தியா வந்த வேறெந்த பட்டதாரிக்கும் இந்த அவமானம் நடந்திருக்காது. அம்பேத்கருக்கு மட்டும் ஏன் நடக்க வேண்டும்? அம்பேத்கர் கண்ணீர் வடித்தார். மனதிற்குள் வேதனை பட்டார். ஒரு கல்வி அறிஞருக்கு உலகில் வேறெந்த நாட்டிலும் இப்படி ஒரு கொடுமை நடந்திருக்காது. இனி வரும் காலங்களில் இனிமேலாவது சாதி என்ற பெயரில் மனிதர்களுக்கு நேரும் அவமானம் தடுக்கப் பட வேண்டும். ஆனால் அது கல்வியின் மூலம் நடக்க வேண்டும். அதுதான் அம்பேத்கருக்கு நாம் செய்கிற மரியாதையும் நன்றியும்.
அம்பேத்கர் தனது முயற்சியை கைவிட வில்லை. தனது நுட்பமான அறிவை பயன்படுத்தி புத்தகங்கள் எழுதினார். இந்தியாவின் சிறு குத்தகை நிலங்களும் அதன் தீர்வுகளும் என்ற புத்தகம் வெளியிட்டார். தனியே அமைப்பை உருவாக்கி மாணவர்களுக்கு கல்வி அளித்தார். 1918 சைடனம் என்ற கல்லூரியில் அரசியல் பொருளாதார பேராசிரியர் பதவி அடைந்தார் . ஆனால் அப்போது கூட சக ஆசிரியர்கள் பருகும் பானையில் தண்ணீர் குடிக்க அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. 1920 மார்ச்சில் லண்டன் சென்று பொருளாதார சட்டக் கல்வியை தொடர்ந்தார் . அம்பேத்கர் வாழ்வில் கல்வி மட்டுமே அவருக்கான ஒரே ஆயுதமாக இருந்தது. அவர் மனித ஏற்றத்தாழ்வுகளை களைய தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தார்
Comments
Post a Comment