சலூன் நூலகம்

தூத்துக்குடியில் மாரியப்பன் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். அவரது கடையிலேயே சொந்தமாக நூலகம் வைத்து நடந்துகிறார். அந்த நூலகத்தில் வரும் வாடிக்கையாளர்கள் புத்தக வாசித்தால் முடிவெட்ட கொடுக்கும் பணத்தில் 30% தள்ளுபடி. அதாவது முடிவெட்ட 120 ரூபாய் என்றால் நீங்கள் கடையில் போய் புத்தகம் வாசித்தால் 80 ரூபாய் கொடுத்தால் போதும். தமிழ் இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் எழுதிய அனைத்து புத்தகங்களும் வைத்திருக்கிறார். விலைவாசி உயர்ந்து வியாபாரிகள் தங்கள் பொருளின் விலையே உயர்த்தி லாபம் சம்பாதிக்கும் இதே உலகத்தில் மாரியப்பன் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க இப்படி புதிய முறையை கையால்வது பெரும் பணி. இந்தியாவிலேயே இது போன்று எங்கும் சலூன் கடையில் நூலகம் வைத்து யாரும் நடத்தியதில்லை என்று எழுத்தாளர் எஸ். ரா அவருடைய வலைதளத்தில் எழுதியிருந்தார். பணம் தான் முக்கியம் என்று வாழும் இந்த சமூகத்தில் பொன் மாரியப்பன் போன்ற மனிதர்கள் அறத்தொடு வாழுகிறார்கள். அவர் நூலகத்தில் பள்ளி மாணவர்கள் சிறுவர்களை புத்தகம் வாசிக்க ஊக்குவிக்கும் விதமாக என்று நிறைய சலுகைகள் பரிசுகள் தருகிறார். யூடுபே மூலம் நிறைய இலக்கியம் சார்ந்த உரைகள் 
நிகழ்த்திவருகிறார்.
விளம்பரம் அதிக லாபம் மட்டுமே குறிக்கோளாக வைத்து சாதாரண
மக்களிடம் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கார்பொரேட் நிறுவனங்ககுக்கு மத்தியில் பொன் மாரியப்பன் அரிய சேவையை செய்து வருகிறார். செய்யும் தொழிலேயானாலும் ஒரு அறத்தோடு செய்கிறார். புத்தகம் வாங்கி வாசிக்க முடியாத எத்தனையோ வறுமையில் வாடும் மாணவர்களுக்கு இந்த மாதிரியான செயல் மிகுந்த உதவியாக இருக்கும். நண்பர்களே நீங்களும் அவரை தெரிந்து கொண்டு  உங்களால் முடிந்த ஆதரவு அளியுங்கள்.பலரிடமும் தெரிய படுத்துங்கள். கூடி வாசிப்போம் வாழ்வை அர்த்தப் படுத்திக் கொள்வோம்
பொன் மாரியப்பனுக்கு அன்பும் நன்றியும் என்றென்றும்.....!

அதிகம் தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும் :


Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )