நெருப்பு பேனா - 3
தொடர்ந்து அரசியல் சட்டமன்றத்தில் பணியாற்றினார். அரசியல் சட்ட வரைவு மற்றும் மசோதா நகல் எடுக்கும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப் பட்டது. அரசியல் தலைவர்களோடு அவருக்கு கருத்து வேற்றுமை ஏற்பட்டது. சாதிக்கு எதிரான போராட்டத்தில் முற்றிலுமாக சாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர் அனைவரிடமும் முரண்பட காரணமாக அமைந்தது. வாழ்நாள் முழுவதும் அம்பேத்கரின் போராட்டமும் அதுதான்.
அம்பேத்கரின் சிந்தனை பௌத்தம் மற்றும் மார்க்கசியம் இரண்டும் கொண்டது . இரண்டுமே மனித சமத்துவத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தியவை. ஆனால் இந்தியாவில் ஆழமாக வேருன்றிஇருந்த மதவெறியும் சாதிவெறியும் அவரை அதிகம் கோபத்தை உண்டாக்கின. அதுவே சாதிதான் வாழ்க்கை என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று முழங்க வைத்தது.
சமூக சீர்திருத்தவாதியாக தொடர்ந்து போராடிய அவர் இறுதி காலங்களில் புத்த மதத்தை தழுவுபவராக மாறினார். உலக பௌத்த மாநாடுகளில் கலந்து கொண்டு இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினார். 1955 பாரதீய புத்த பேரவையை அமைத்தார். புத்த மத கொள்கைகள், மார்க்கசியம் பொதுவுடைமை சிந்தனைகளை கொண்டதால் அதை ஆதரித்தார். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கையில் ஒரு உண்மை தெளிவாக புரிகிறது. அனைவர்க்கும் பொதுவான நியாயமான பொதுவுடைமை சிந்தனைகளை கொண்ட மதத்தை அவர் விரும்பினார். சமய சார்பில்லாமல் தனி மனிதனால் வாழமுடியாது என்று ஆழமாக நம்பிய அவர் இறுதி காலங்களில் புத்த மதத்தை முழுமையாக நம்பினார். தனி மனிதன் எந்த மதத்தை தழுவுவதும் அவரவர் உரிமை. ஆனால் மதத்தின் பெயரால் நடக்கும் அதிகார அரசியலை அவர் விரும்ப வில்லை. அரசியல் மத சார்பற்ற ஜனநாயக பொதுவுடைமை சித்தாந்தங்களை கொண்டது . அதனால் தான் அவர் அனைத்து மனிதர்களுக்கு பொதுவான சட்டங்களை உருவாக்கி சமூகத்தை பொதுவுடைமை ஆக்கினார். மொழியால் மதத்தால் பிரிந்து கிடக்கும் மனிதர்களை ஒன்றிணைப்பதும் சட்டமே ஆகும்.
போராடி ஒய்ந்த அம்பேத்கர் இறுதி நாட்களில் நோயால் உடல் நலம் பாதிக்க பட்டார். சுவாசக் கோளாறு காரணமாக செயற்கை ஆக்சிஜன் அவருக்கு வழங்கப் பட்டது. ஒரு கட்டத்தில் அவர் எழுந்து நடமாட முடியாத அளவிற்கு படுத்த படுக்கையானார். மேலும் பொருளாதார சீர்கேடு அனைத்தும் அவரை துன்பத்தில் ஆழ்த்தின. இத்தனை ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக 1955ல் சட்ட மன்ற உள்ளாட்சி அமைப்புகள் தாழ்த்தப் பட்டவர்களை ஒதுக்கி வைப்பது தவறானது என்று முடிவு செய்து தீர்மானத்தை நிறைவேற்றினர்.
எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியால் மட்டுமே தன்னையும் சமூகத்தையும் முன்னேற்றிய அவர் டிசம்பர் 6 காலையில் 6.30 மணிக்கு இந்த உலகை விட்டு பிரிந்தார் . இறுதி காலத்தில் அம்பேத்கர் குடியரசு கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் முனைப்போடு இருந்தார். மேலும் அரசியல் சாதாரண மனிதர்களுக்கு தெரிய வேண்டுமென அரசியல் பள்ளி ஒன்றை ஆரம்பிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் உடல்நிலை மிக மோசமாக பாதிப்படைந்த காரணத்தினால் அந்த முயற்சி ஈடேறவில்லை.
சமத்துவம் மட்டுமே அம்பேத்கரின் லட்சியக் கொள்கையாகும். பிரெஞ்சு புரட்சிதான் அவருக்கு முன் மாதிரியாக இருந்தது. அனைத்து மனிதர்களும் உண்மை உணர்வு அடிப்படையில் சமத்துவம் இல்லை. கிழே கொடுக்கப் பட்டுள்ள மூன்று சக்திகள்தான் மனிதனின் ஏற்றத் தாழ்வுகளை தீர்மானிக்கின்றன.
தனி மனிதனின் சக்தி மூன்று வகைகளில் பெறப்படும்
1. வம்சாவழியான உடல் வலிமை
2. பெற்றோர் அளிக்கும் கல்வி, பராமரிப்பு, தொழில் நுட்ப அறிவு மற்றும் பிரபஞ்ச அறிவு மூலம் சக்தி வெளிப்படுகிறது.
3. ஒவ்வொரு மனிதனின் தன் முயற்சி.
இதில் அம்பேத்கர் எழுப்பும் கேள்வி என்னவெனில் திறமையின் அடிப்படையில் அனைத்து மனிதர்களும் சமமில்லை என்பது உண்மை என்றாலும் ஒரு அரசாங்கம் அதற்காக மனிதர்களை இழிவான நிலையில் நடத்த வேண்டுமா என்பதுதான்?. பொதுவான கோட்பாடுகளின் படி அனைத்து மனிதர்களையும் சமமாக நடத்த வேண்டுமே தவிர கொள்கைகள் மூலம் நம்பிக்கைகள் மூலம் மனிதர்களை தாழ்மை படுத்தக் கூடாது என்கிறார். இல்லாவிட்டால் அது அநீதி என்றும் சாடுகிறார்.
இந்திய வரலாற்றில் தீண்டாமை எப்படி உருவானது? தாழ்வான குலம் தீண்டதகாத மனிதர்கள் என்று யாரெல்லாம் ஒதுக்கப் பட்டார்கள்? வரலாற்றின் அடிப்படையில் இந்த வேற்றுமை எப்படி உருவானது என்று அம்பேத்கரின் சமூக அரசியல் கட்டுரைகள் ஆழமாக ஆராய்ச்சி செய்கின்றன. குறிப்பாக கி. பி. 400க்கு பிறகே தீண்டதகாதவர்கள் என்கிற குலம் மேல் சாதி என்று சொல்லிக் கொள்ளும் சில மனிதர்களால் உருவானது என்று சொல்கிறார். அம்பேத்கரின் தொடர்ச்சியான சாதி குறித்த ஆராய்ச்ச்சியும் அவர் கண்டடைந்த உண்மையும் மிக முக்கியமானவை. இந்திய ஒருமைப் பாட்டிற்கும் ஜனநாயக அரசியலுக்கும் அதன் தேவை எந்த காலத்திலும் இருக்கும். அதற்கு அம்பேத்கர் கொடுத்த வடிவம்தான் சட்டம். அம்பேத்கர் உருவாக்கிய அரசிலமைப்பு சட்டம்தான் அனைத்து பொதுவுடைமை வாழ்வியலுக்கு மூல காரணம் . அவரது அரசியல் உலக அரசியல். அதில் பொருளாதார ஆய்வுகளையும் உள்ளடக்கியது.

Comments
Post a Comment