நாலாயிரம் முறை வாழ்ந்த மனிதர்.....!
பள்ளி வயதில் வறுமை காரணமாக பாட புத்தகங்கள் வாங்க கூட காசில்லாத ஆசிஸ் அந்த வறுமையை ஜெயிக்கவே புத்தக கடை ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார். அவரது புத்தக கடையில் 4000 புத்தகங்கள் உள்ளது. அதை ஒன்று விடாமல் படித்து விட்டதாக கூறுகிறார் . வியப்பாக உள்ளது .
நாலாயிரம் புத்தகங்கள் வாசித்ததன் வழியாக நாலாயிரம் முறை வாழ்ந்து முடித்து விட்டதாக தெரிவிக்கிறார். ஒவ்வொரு புத்தகமும் தனி உலகம். தனி வாழ்வியல். தான் வாசித்ததை பிறருக்கு எடுத்து சொல்லி புத்தகம் வாசிக்க உதவி செய்கிறார். உலகில் உள்ள அனைத்து மனிதனும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம். அது அசாத்தியம். ஆனால் ஆசிஸ் போன்ற மனிதர்கள் அந்த சவாலை முறியடிக்க மட்டுமே வாழ்கிறவர்கள்.
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கிறார். ஆறு மணி நேரம் புத்தகம் வாசிப்புதான். உணவு, பிரார்த்தனை, புகைப்பிடிப்பது என்று எதுவும் இல்லாமல் முழு நேரமும் வாசிப்பில் ஈடுபடுகிறார்.
நாலாயிரம் புத்தகம் இருந்தாலும் இன்னும் எத்தனை புத்தகங்கள் வாங்கினாலும் அது தனக்கு போத வில்லை என்றும் மீண்டும் புத்தகம் வேண்டும் என்று சொல்கிறார்.
71 வயதில் கடுமையாக உழைத்து மனிதர்கள் படிக்க வேண்டும் மேலும் அவர்களுக்கு தேவையான புத்தகங்களை தேடி கண்டுபிடித்து தருவதும் தனது வேலையாக வைத்துள்ளார். வறுமை பலரை வாழ்நாளில் மூடக்கி கோழையாக மாற்றி விடும் என்று பயப்படுவது முட்டாள்தனம். முகமது ஆசிஸ் போன்றவர்கள் அதை ஜெயித்து பிறரையும் முன்னேற்ற உதவி செய்கிறார்கள்.
புத்தகம் வாசித்து பெரிய புத்தககடை நடத்தி மோரோக்கோவில் உள்ள அனைத்து மனிதர்களும் வாசிக்க வேண்டும் என்று வாழும் அவர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மாமனிதர்.
வெறும் புத்தக கடை மட்டும் இல்லாமல் பொது மக்கள் வாசிக்க மற்றும் தெரிந்து கொள்ள வசதியாக நூலகமாகவும் இதை நடத்தி வருகிறார். வறுமை ஒரு குறையில்லை. அது திறமையை வளர்த்துக் கொண்டு முன்னேற ஒரு வழி என்பதை அவர் வாழ்க்கை உணர்த்துகிறது. பெரிய பணக்காரராக இல்லவிட்டாலும் அனைவரது படிப்பு தேவைக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யும் ஆசிஸ் போன்ற மனிதர்கள் இன்னும் உலகத்தில் வாழ்வது நம் வாழ்வதற்க்கும் ஒரு நல்ல நம்பிக்கையாக இருக்கிறது.
சாமானிய வாசகன் நூறு புத்தகங்கங்கள் வாசிக்கவே சிரமம். ஆனால் முகமது ஆசிஸ் புத்தகம் வாசிக்கவே தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டிருக்கிறார். தனது ஆறு வயதில் பெற்றோர்களை இழந்து தனிமையில் வறுமையோடு போராடியிருக்கிறார். பணம் கொடுத்து புத்தகம் வாங்க முடியாத சூழல். ஆனாலும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை மட்டும் கைவிட வில்லை. 1963ல் மரத்தடி நிழலில் தன்னிடம் உள்ள ஒன்பது புத்தகங்களை கொண்டு புத்தக கடையை ஆரம்பித்துள்ளார். அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஸ் மொழியில் குறைந்த பட்சம் ஒரு புத்தகத்தையாவது வாசித்துள்ளார்.
நாலாயிரம் புத்தகங்கள் வாசித்ததன் வழியாக நாலாயிரம் முறை வாழ்ந்து முடித்து விட்டதாக தெரிவிக்கிறார். ஒவ்வொரு புத்தகமும் தனி உலகம். தனி வாழ்வியல். தான் வாசித்ததை பிறருக்கு எடுத்து சொல்லி புத்தகம் வாசிக்க உதவி செய்கிறார். உலகில் உள்ள அனைத்து மனிதனும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம். அது அசாத்தியம். ஆனால் ஆசிஸ் போன்ற மனிதர்கள் அந்த சவாலை முறியடிக்க மட்டுமே வாழ்கிறவர்கள்.
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கிறார். ஆறு மணி நேரம் புத்தகம் வாசிப்புதான். உணவு, பிரார்த்தனை, புகைப்பிடிப்பது என்று எதுவும் இல்லாமல் முழு நேரமும் வாசிப்பில் ஈடுபடுகிறார்.
நாலாயிரம் புத்தகம் இருந்தாலும் இன்னும் எத்தனை புத்தகங்கள் வாங்கினாலும் அது தனக்கு போத வில்லை என்றும் மீண்டும் புத்தகம் வேண்டும் என்று சொல்கிறார்.
71 வயதில் கடுமையாக உழைத்து மனிதர்கள் படிக்க வேண்டும் மேலும் அவர்களுக்கு தேவையான புத்தகங்களை தேடி கண்டுபிடித்து தருவதும் தனது வேலையாக வைத்துள்ளார். வறுமை பலரை வாழ்நாளில் மூடக்கி கோழையாக மாற்றி விடும் என்று பயப்படுவது முட்டாள்தனம். முகமது ஆசிஸ் போன்றவர்கள் அதை ஜெயித்து பிறரையும் முன்னேற்ற உதவி செய்கிறார்கள்.
புத்தகம் வாசித்து பெரிய புத்தககடை நடத்தி மோரோக்கோவில் உள்ள அனைத்து மனிதர்களும் வாசிக்க வேண்டும் என்று வாழும் அவர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மாமனிதர்.
வெறும் புத்தக கடை மட்டும் இல்லாமல் பொது மக்கள் வாசிக்க மற்றும் தெரிந்து கொள்ள வசதியாக நூலகமாகவும் இதை நடத்தி வருகிறார். வறுமை ஒரு குறையில்லை. அது திறமையை வளர்த்துக் கொண்டு முன்னேற ஒரு வழி என்பதை அவர் வாழ்க்கை உணர்த்துகிறது. பெரிய பணக்காரராக இல்லவிட்டாலும் அனைவரது படிப்பு தேவைக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யும் ஆசிஸ் போன்ற மனிதர்கள் இன்னும் உலகத்தில் வாழ்வது நம் வாழ்வதற்க்கும் ஒரு நல்ல நம்பிக்கையாக இருக்கிறது.
மேலும் விபரங்களுக்கு :
Comments
Post a Comment