பூச்சி மனிதன்....!

யோசிச்சு பாருங்க திடீர்னு ஒரு நாள் காலையில நாம கரப்பான் பூச்சியா மாறிடோம்னா என்ன நடக்கும். ஆபிஸ், போன், பிரஷர், எந்த டென்ஷனும் இல்ல. எல்லா பிரச்சனையும் மனுசனுக்குதான். வாழ்க்கை எப்படி மாறுனாலும் நாம எப்படி உறுதியா இருக்கோம் அப்படிங்கிறதுல தான் நாம திறமையே இருக்கு!

பிரான்ஸ் காஃப்கா எழுதிய உருமாற்றம் நாவல் தனிமனித அவஸ்தையைப் பற்றி பேசுகிறது. நெருக்கடியின் போது மனிதன் எந்த மாதிரியான அவஸ்தைக்குள்ளகிறான்? அவன் வாழ்க்கை எப்படியெல்லாம் கடினமாக மாறிவிடும்? என்று இந்த புத்தகம் தெரிவிக்கிறது. நாவலின் முதல் வரியே ஆச்சர்யமாக ஆரம்பிக்கிறது. காலையில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளும் போது ஒருவன் திடீரென பூச்சியாக மாறிவிடுகிறான் என்ற கற்பனையான கதையை சொல்கிறது இந்த புத்தகம். மிகவும் வறுமையான சூழலில் மனிதர்களுக்கு நடக்கும் நெருக்கடியும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற புதிரும் அவன் வாழ்வை எப்படி சிரமத்திற்க்குள்ளாக்குகிறது? என்று தெரிந்து கொள்ள முடிகிறது. வாழ்க்கை நாம் நினைக்கிறபடியெல்லாம் நடக்காமல் சில நேரங்களில் மனிதர்களை சிரமத்திற்குள் தள்ளும் போது மனிதர்கள் எந்த நம்பிக்கையின் துணை கொண்டு அந்த சூழ்நிலையை சமாளித்து கடந்து போகிறார்கள் என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதே சமயம் நல்ல வேலை, வசதி சொத்து, வாய்ப்புகள் அனைத்தும் கிடைத்த மனிதர்களை விட எதுவுமே இல்லாமல் பொருளாதார வசதி இல்லாமல் அன்றாட உணவிற்கே கஷ்டப்படும் மனிதர்கள் நெருக்கடியோடு வாழ்கிறார்கள் என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. தொடர்ந்து வறுமையான எளிய சாமானிய மனிதனுக்கு நடக்கும் அவமானம் கசப்பு,  தோல்வி, கசப்பான சம்பவங்கள், வறுமையின் போது நடக்கும் இப்படியான நெருக்கடி  போன்றவை நிகழும் போது அவன் அதை சமாளிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் வாசிக்கும் போது நமக்கு விடாமுயற்சி மற்றும் வாழ்வின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது . நாம் தினமும் வாழும் அன்றாட வாழ்க்கைக்கு மாறாக ஒரு மனிதன் பூச்சியாக மாறிவிட்டால் என்ன நடக்கும் என்ற புனைவு வாசிக்க வித்தியாசமாக உள்ளது.  மனிதர்கள் வாழ முயற்சி செய்யும் கதை விடாமுயற்சிதான் நமக்கான வாழ்வின் மீதான பற்றை ஏற்படுத்துகிறது. 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )