எயிடொஸ் எனும் வார்த்தை......!

பேராசிரியர் ந. முத்து மோகன் எழுதிய ஐரோப்பிய தத்துவங்கள் என்ற புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன். பிளாட்டோ பற்றி முதலில் விளக்குகிறார் .
அவருடைய தத்துவம் என்னவெனில் உலகில் எந்த ஒரு பொருளின் அழகையும் ரசிக்கும் முன்னர் அந்த அழகு என்பது இதுதான் அல்லது இப்படிபட்டது தான் என்று கருத்து அனைவருக்கும் இருக்கும். இந்த கருத்து என்பது ஒரு கற்பனை தான் கருத்து முதல் வாதமே பொருள் முதவாதம் உருவாவதற்கு முன்னர் தோன்றியது என்பது பிளாட்டோவின் கருத்து. ஒரு வேளை இது மரபார்ந்த நம்பிக்கை தொன்று தொட்டு இன்னும் பின்பற்ற படுவதின் மூலம் நிகழ வாய்ப்பு இருக்கிறது.


பொருள்முதல்வாதம் என்றால் புலன்ங்களால் இந்த உலகை அறிந்து புரிந்து கொள்ளும் அறிவு. அதாவது பொருள் என்றால் நடைமுறை விஷயங்களையும் வாழ்வின் ஆதாரங்களையும் அனுபவத்தின் வழியாக மட்டுமே நேரிடையாக அறிந்து கொள்வது. கருத்துமுதல்வாதம் என்பது உலக இயக்கங்கள் அனைத்திற்கும் கடவுள் அல்லது பிரபஞ்ச இயக்க ஆதார சக்தி Superior power உள்ளது என்றும் அதன் அடிப்படையில் புரிந்து கொள்வது. அதாவது கடவுளை புலன்ங்களால் உணர முடியாது. ஒரு கற்பனை புரிதல் மட்டுமே அங்கே நிகழ்கிறது.  மனிதன் உருவாக்கிக் கொண்ட கற்பனை அதுதான். இது மனிதனின் கருத்துருவாக்கம் மட்டுமே. இதன் அடிப்படையில் பார்த்தால் பிளாட்டோ ஒரு கருத்துமுதல்வாதி என்று புரிந்து கொள்ள முடியும்.

கான்ட்

காலம்,வெளி மற்றும் புலனனுர்வு பற்றி கருத்தாக்கம் கொண்ட தத்துவம் கான்டின் தத்துவம்.
குறிப்பாக  Eidos என்ற ஆங்கில வார்த்தை உள்ளது. அதன் இன்னொரு அர்த்தம் Ideos. என்பது. அதாவது அகக் கண்ணால் நோக்குவது. என்றால் சிந்திப்பது. புற உலகில் பொருட்கள் அதனதன் இயல்பிலேயே இயங்கு கின்றன. புலன்கள் மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவம் உண்மையிலேயே அந்த பொருள் பற்றிய புரிதலை முழுவதும் தருவில்லை. அதாவது நமது அனுபவம் வாயிலாக நாம் புரிந்து கொள்வதும் புற உலகில் உள்ள பொருளின் தன்மைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. எனில் நாமே உருவாக்கிக் கொண்ட கற்பனைதான் என்று சொல்கிறார். கான்டின் இந்த தத்துவத்தை அறியொணாவாதம் என்பார்கள்.




உதாரணமாக சாலையில் ஓரத்தில் ஒரு மரத்தை பார்க்கிறோம். அந்த மரத்தை பார்க்கையில் இது மரம் என்றோ அல்லது அதோடு தொடர்பு கொண்ட ஒரு நினைவோ நம்மை தாக்குகின்றன. இந்த சிந்தனை நாமாக உருவாக்கிக்ககொண்டது அல்லது உருவானது. இது அந்த மரத்தோடு நம்மை நெருங்குவதையோ அல்லது அதை முழுமையாக உணர்ந்து புரிந்து கொள்ளவோ தடை செய்கிறது. இப்படி எந்த கருத்துருவாக்கமும் இல்லாமல் அந்த பொருளை அணுகும் போது அதன் இருப்பை புரிந்து கொள்ள முடியும். இதன் வழியாக மனிதனின் அகத்தையும் புற உலகோடு அவன் கொள்ளும் அனுபவத்தையும் கான்ட் ஆராய்ச்சி செய்கிறார். அதாவது புற உலகில் எதையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. நாம் நினைப்பது போல் அந்த பொருள் இருக்காது என்று அர்த்தம். உண்மையில் வெளி உலகம் நாம் நினைத்தது போல் நிச்சயம் இருக்காது. புரிந்து கொள்ள முடியாத புதிர் தான். மனம் ஏற்படுத்தும் கற்பனைதான் இதன் மூலம் விளங்கும். மனதை புரிந்து கொண்டு கடந்து போனாலே வெளி உலகில் அல்லது வாழ்க்கையில் அனைத்தையும் புரிந்து கொள்ளவும் கடந்து போகவும் முடியும். ஆகையால் அந்த ஒரு பிரச்சனையோ ஆபத்தோ அல்லது கஷ்டமான நேரத்திலோ நாம் மனதை அமைதியாக கவனிக்க ஆரம்பித்து பொறுமையாக புரிந்து கொள்ள முயற்சி செய்தால் நம்மால் அதை கடந்து போக முடியும். அனைத்திற்கும் மனம்தான் காரணம் என்று புரிவது அவசியம்.

1724ல் ஜெர்மனியில் உள்ள கோலின்ஸ் பேர்க்கில் கான்ட் பிறந்தார் . பின்னர் ரஷ்யவில் அந்த மாநிலம் மாற்றப் பட்டு கலிலின்ஸ்பேர்க் என்று அழைக்கப் பட்டது. ஆரம்பத்தில் கான்ட் இயற்கை விஞ்சானம் தத்துவம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். அவருடைய குடும்பம் தீவிர சமய நம்பிக்கை கொண்ட குடும்பம். அவர் அப்பா சீர்திருத்தக் கிருத்துவ மதப் பிரிவை சார்ந்தவர். 1770-81 ஆம் ஆண்டில் அவருடைய சுத்த அறிவு குறித்த விமர்சனம் ( Critique of pure Reason ) புத்தகம் தத்துவ உலகில் சிறப்பாக பேசப் பட்டது. மனிதநேயம் மற்றும் பகுப்பாய்வு நுட்பம் இவைகள் தான் கான்ட்டின் அடிப்படை எழுத்தின் ஆதாரம்.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )