நெருப்பு பேனா - 4

அவரது ஆய்வின் படி எந்த ஒரு அரசியல் திட்டமும் பொதுவகை திட்டம் மற்றும் நெறிமுறைகளின் படி சமூக கட்டுப்பாடு செயல்பட வேண்டும் என்கிறார்.  அந்த வகையில் இரண்டு முக்கியமான விஷயங்களை குறிப்பிடுகிறார் .

1. இட ஒதுக்கீடு.
2. தனி வாக்காளர் தொகுதி.

இன்றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே இட ஒதுக்கீடு பற்றி அம்பேத்கர் சிந்தித்து செயல்படுத்த போராடியிருக்கிறார். ஆனால் இன்றும் அந்த பிரச்சனை தீர்ந்தபாடில்லை . மத அரசியலும் பாசிச மனப் பாங்கும்தான் இதற்கு காரணம்.

அம்பேத்கர் பற்றிய யூடுப் உரை ஒன்றில் எழுத்தாளர் மதிவதனி  குறிப்பிடுகையில், அம்பேத்கர் வறுமையிலும் புத்தக வாசிப்பை விட வில்லை. அவருக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தும் அவர் வாழ்நாள் முழுக்க படிப்பதிலே செலவிட்டிருக்கிறார். சாப்பிட வசதியில்லாமல் ஒரு வேளைக்கு ஒரு பண், ரொட்டி மட்டுமே சாப்பிட்டு புத்தகம் வாசித்திருக்கிறார் . உலகமே விழித்துக் கொண்டிருந்த போதும் அவர் உறங்கவில்லை.
அம்பேத்கரை சுற்றி வீடு முழுவதும் புத்தகம் நிறைந்திருக்கும் என்று குறிப்பிடும் மதிவதனி, அம்பேத்கர் இறப்பதற்கு முன் இரவில் கூட புத்தகம் வாசித்துக் கொண்டிருந்ததாக சொல்கிறார். மேலும் அவர் தீவிர எழுத்தாளர். வாழ்நாள் முழுவதும் வாசிப்பு எழுத்து மட்டுமே அவருடைய ஆயுதம். அவருடைய புத்தகங்கள் வெளியிட்டால் அதை லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குகிற பதிப்பகங்கள் இருந்தாலும் வசதிஇல்லாத மாணவர்கள் கல்வி கற்கும் மனிதர்களுக்கு அதை இலவசமாக கொடுத்தார் அம்பேத்கர்.

இந்தியாவில் இன்று வரை அந்நிய நாட்டு முதலீடுகளுக்கு வரி விலக்கு இருக்கிறது . பிரிட்டிஷ் இந்தியாவை அடிமைபடுத்திய நாட்களிலிருந்து இன்றும் தொடர்கிறது. இந்தியா வணிகம் மற்றும் பொருளாதாரத்தை பற்றியும் அம்பேத்கர் ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதி புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். என்பது ஆச்சர்யமாக இருக்கிறது . இந்தியா வணிகத்தை பொறுத்த வரை ரூபாயின் அல்லது பணத்தின் மதிப்பு வாங்கும் திறனால் தீர்மானிக்க படுகிறது  என்று சொல்கிறார் . இந்தியா பொருளாதாரத்தை பற்றிய அவருடைய, " ரூபாயின் சிக்கல்களும் அதன் தோற்றமும் தீர்வுகளும்" ( The Problem of the Rubee- its origin and Solution ) புத்தகம் லண்டனில் வெளியிடப்பட்டது. கல்வி மறுக்கப்பட்டபோதிலும் தீண்டாமைக்கு எதிராக போராடி இன்றைக்கு இந்தியா சட்டத்தையும் வணிகத்தை தீர்மானிக்கிற புத்தகத்தையும் எழுதுமளவுக்கு திறமையை வளர்த்துகொண்டார் அம்பேத்கர். மேலும் தனது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடு பட்ட அம்மா அப்பாவிற்கு இந்த புத்தகத்தை அவர் சமர்பித்தார். இன்றைக்கும் கூட இந்தியா பொருளாதார வணிக துறைக்கு அம்பேத்கர் எழுதிய புத்தகமும் ஆராய்ச்சி கட்டுரைகளும் பெரும்பங்கு ஆற்றி வருகின்றன.
குறிப்பாக ரூபாயை பற்றியும் தங்கத்தை பற்றியும் அவர் வரையறை செய்கிறார் . ரூபாயை தங்கமாகவும் தங்கத்தை ரூபாயாகவும் மாற்றக் கூடாது. மேலும் அந்நிய செலாவாணி வர்த்தகத்தை பற்றி கூறும்போது இரு நாட்டுக்கு இடையே நிலையான பொதுவான பகிர்ந்தளித்தலின் அடிப்படையில் பரிமாற்றம் நிகழ வேண்டும் எனவும் ரூபாய் மற்றும் தங்கத்தின் மதிப்பு தரமான சரியான விகிதத்தில் நிர்ணயிக்க பட வேண்டும் என வலியுறுத்திகிறார். நம்மிடம் உள்ள பொருளாதார நிலையை சரியாக பராமரித்து வாழ பழகிக் கொண்டாலே போதும் புதிய பொருளாதார நிலையை தேடி போக வேண்டிய அவசியம் இல்லை எனவும் தீர்மானிக்கிறார்.
அமெரிக்காபோன்ற பெரு முதலாளித்துவ நாடானது விவசாய நாடாக இருந்து முன்னேற தொடங்கி இன்றைக்கு பெரு தொழில் நுட்ப நாடாக திகழ்கிறது. ஆனால் இந்தியா படிப்படியாக கிழிறங்கி நாகரீகமற்றத் தன்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நமது சிந்தனை நவீனமயமாக வேண்டும் என்றும் அம்பேத்கர் ஆதங்க படுகிறார்.

அம்பேத்கர் ஒரு போதும் கடவுளை மறுக்க வில்லை. மனிதன் நேர்மையாக ஒழுக்கமாக வாழ நல்ல நெறி காட்டும் சமயம் தேவை என்றே கூறுகிறார். மேலும் மனிதனை நெறிப்படுத்தி வாழ்வின் இன்றியமையாத பகுதியாக சமயம் உள்ளது என்கிறார். ஆனால் அதே சமயம் மனிதர்களை வேறு படுத்தி அடிமைபடுத்தி அதிகாரத்தை அடையும் பாசிச மனபான்மை கொண்ட மதத்தின் நடைமுறையை அவர் எதிர்க்கிறார். அவர் பௌத்த மதத்தை தழுவ காரணம் புத்தர் அன்பை போதிக்கிறார். மேலும் அதில் அருவமாக இறை தன்மை நிறைந்துள்ளது. மேலும் கருணை பொதுதுவுடைமை, அறிவை வளர்த்துக் கொள்ளுதல் தியானம் போன்றவை பௌத்தம் காட்டும் அறம். தீண்டாமை கொடுமைகள் நடக்கும் மதம், அதன் கொள்கைகள் குறிப்பாக மனித ஏற்றத் தாழ்வுகள், இதை அம்பேத்கர் எதிர்கிறார்.

அம்பேத்கரின் சமயம் பண்பாடு குறித்த அவரது பார்வையில் கடவுள், மனிதன் சமுதாயம் என்கிற மூன்று மூலக் கூறுகளை வைத்துக் கொண்டு மதத்தையும் அது மனித வாழ்வில் எந்தளவுக்கு முக்கியமாக தேவை படுகிறது சமூக முன்னேற்றத்திற்கு மதம் எப்படியெல்லாம் தடையாக இருந்துள்ளது என்பதை சுட்டி காட்டுகிறார். மேலும் சமயம், தத்துவம், போன்றவற்றை ஆய்வு செய்து அவர் கூறுவது சமயம் என்பது கருத்தமைவு என்று வரையறை செய்கிறார்.
மனித சமுதாயம் சீராக, நல்ல சமுதாயமாக வாழ கடவுளின் ஆட்சியாக விளக்கப்பட்ட திட்டமே சமயம் என்று அம்பேத்கரின் கூற்று சொல்கிறது.

அம்பேத்கர் குறிப்பிட்ட சாதியினரின் விடுதலைக்காக போராடியவர் என்றோ, அவரை உரிமை கொண்டாடி சாதிய அடையாளமாக மாற்றி சாதி அரசியல் செய்வதோ முட்டாள்தனமானது  . அதுவும் ஜனநாயகத்தை அழிக்கும் விரோத செயல். எனவே ஜனநாயக அரசியல் அனைவர்க்கும் பொதுவான நியாயத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது அம்பேத்கர் எடுத்த முடிவு. நியாயம் என்பது என்ன என்பது அம்பேத்கர் கூறிய விளக்கம் என்னவெனில், " சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம் " என்பதுதான். அதிலும் குறிப்பாக கருணையும் மனித ஒற்றுமையும்தான். இந்து மத வர்ணாசிரம கொள்கை மனித வேற்றுமைகளை கொண்டது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எப்படி அடிமையாக இருக்க முடியும்? என்பது அவருடைய வாழ்நாள் போராட்டம். அறிஞர் மில் என்பவரின் கூற்றுபடி, " உபயோகத் தன்மைக்கும் நியாயத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை " அதே போல மதம் நியாயத்தை வழங்காத போது உபயோகமற்றதாக மாறிவிடுகிறது என்கிறார். 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )