அவள் பெயர் மேபல்!

சிறுகதை: மேபல் 
எழுத்தாளர் : தஞ்சை பிரகாஷ் 

மேபல் சிறுகதை வாசித்து பல நாட்கள் அந்த தாக்கத்தில் இருந்தேன். சில கதைகள் நம்மையும் மீறி ஏதாவது அதை பற்றி உளற வைத்து விடும். திடீரென்று உறக்கம் கலைந்த ஒரு நடு இரவில் அந்த கதை மனதில் ஊசலாட தொடங்கியது. எதிர்கால வாழ்வு குறித்த நிச்சயமற்ற தன்மையால் மனம் தத்தளித்தபடியிருந்தது. மேபலை நினைத்துக் கொண்டேன். அவளை போலவே மனம் விட்டு பேச ஒரு மகளோ தோழியோ இருந்தால் போதும் மூர்க் கமான இந்த வாழ்வை எளிதாக கடந்து செல்லலாம்.

குடும்பத்திற்காக தன்னை கரைத்துக் கொண்டவர்கள் என்றும் மறக்கடிக்க படாதவர்கள். எல்லா குடும்பத்திலும் யாரோ ஒருவர் மட்டுமே அந்த குடும்பத்தின் ஒரே சந்தோசமாக இருப்பார் . மேலும் அவர்தான் அந்த குடும்பத்தின் அனைவரையும் இணைக்கும் புள்ளியாகவும் இருப்பார்கள். எல்லா குடும்பத்திலும் அனைவரும் யாரோ ஒருவருக்கு உண்மையாக இருப்பார்கள். மேபல் அப்படியான ஒரு பெண். அவள் தந்தை குடித்து விட்டு தினமும் அடிக்கும் போதும் அவளை திட்டி உதாசீன படுத்தும் போதும் கூட மேபல் தான் தந்தையை வெறுக்கவேயில்லை. பெண்கள் மட்டுமே ஏன் தன்னை துன்புறுத்துபவனிடம் கூட எப்படி கருணையோடு நடந்து கொள்கிறார்கள். எத்தனை பெண்கள் குடும்பங்களுக்குக்காக தங்களை கரைத்துக் கொண்டாலும் பெண்கள் இன்னும் ஒடுக்கப்படுவதும் தீட்டு என்கிற பெயரில் துன்பத்தை அனுபவிப்பதும் இன்னும் நடந்தேறிக் கொண்டேதான் உள்ளது. மேபல் என்ற இந்த சிறுகதை குடும்பத் தின் கதை வழியே பெண்ணின் அன்பை விவரிக்கிறது. என்னதான் தந்தை கரடு முரடான ஆளாக இருந்தாலும் அவர் தன் மகள் மேபலிடம் மனம் திறக்கும் பகுதி மிக முக்கியமானது. ஒவ்வொரு ஆணும் வெளி படுத்த முடியாத துயரத்தை மனத்துள் சுமந்த படியே தான் குடும்பத்தினுள் சுழன்று கொண்டிருக்கிறான். அப்படி மன துயரத்தை யார் மீதாவது பேசி தீர்த்துக் கொள்ள மேபல் மாதிரி மகள் வேண்டும்தான். 


தூசிகள் அப்பி பாழடைந்த குடும்ப உறவுகளை பெண்களே மலர செய்கிறார்கள். உலகம் உருவான காலத்தில் மனிதர்கள் உருவான காலம் தொட்டே பெண்தான் குடும்ப வளர்ச்சிக் கு ஆதாரமாக இருந்திருக்கிறாள். ஆனால் மதவாதம் உருவாக்கிய சமூக கட்டமைப்பும் தவறான கருத்தியல் களும் அவளை ஆணுக்கு அடிமையாக நடத்துவது அராஜக போக்கின் உச்சம். 
 
சாதிய ஆணவக் கொலையாளிகள், ஆணாதிக்கவாதிகள் இச்சை கொண்ட மிருகங்கள், ஆண்களை திருத்த வேண்டும் என்று பெண்களை பழி கொடுக்கும் சுயநலமிகள் மேபலை வாசிக்க வேண்டும். அப்படியாவது பெண்ணின் மனதை இரக்கத்தை மென்மையை புரிந்து கொள்ள முடியுமா அவர்களால் என்று பார்ப்போம்!

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )