அப்பா அந்தோனியாவும் மகன் ப்ருனோவும்....!
Bi cycle theif திரைப்படம் பற்றிய எஸ். ரா வின் உரையை கேட்டறிந்தேன். எப்படி ஒரு திரைப்படம் பற்றி ஒரு மனிதரால் இவ்வளவு அழகான சுவாரஸ்யமாக பேச முடிகிறது என்று வியப்பாக இருந்தது.
யூடுபில் சப் டைட்டில் உதவியுடன் பார்த்தேன். உண்மையில் சப் டைட்டில் தேவை படவே இல்லை. ஒவ்வொரு காட்சி அமைப்பும் கலை பூர்வமாக மிக யதார்த்தமாக எடுக்கப்பட்டிருந்தது. தொலைந்து போன சைக்கிளை நாமும் அந்தோணியுடன் தேட ஆரம்பிக்கி றோம்.
கதை நிகழும் களம். அழகான நகரத்தின் காட்சிகள். அந்தோணியும் அவன் மகனும் நடந்து செல்லும் பாலம் பார்ப்பதற்கு இனிமையான காட்சியாக இருந்தது.
அந்தோணியும் மகன் ப்ருனோவும் உணவு விடுதியில் சாப்பிடும் காட்சி மிக அழகானது. Bruno பக்கத்து மேசையில் அவனைப் போல சாப்பிடும் இன்னொரு சிறுவனை போல சான்விச்சினை கடித்து சாப்பிடுகிறான். அங்கு இசை யமைக்கும் இசை கலைஞரை பார்த்து ரசித்து சிரிக்கிறான். நெருக்கடிகளுக்கிடையில் மனிதன் அடையும் சின்ன சின்ன கொண்டாட்டங்கள் மிக அழகானது என்று புரிந்து கொள்ள முடிந்தது. அந்தோணியா சைக்கிள் திருட போன துயரத்தில் மகனின் சந்தோசத்தை ஏன் தொலைக்க வேண்டும் என்று உணவு விடுதிக்கு அழைத்து செல்லும் காட்சி நெகிழ்ச்சி யாக இருந்தது. பெரும்பாலும் எத்தனை கவலைகளை தனக்குள் புதைத்துக் கொண்டு குடும்பத்தை சந்தோச படுத்தும் நாம் கிராமத்து தந்தைகளை நான் நினைத்து பார்க்கிறேன். எத்தனை துயர்மிகு வாழ்வு. ஆனால் எளிய வாழ்வில் வறுமை அவர்களுக்கு ஒழுக்கத்தையும் அன்பையும் மட்டுமே கொடுத்து நிறைவு கொள்ள செய்கிறது என்பது நிஜம்.
மகன் ப்ருனோவின் நடிப்பு இன்னும் மனதில் மிதந்து கொண்டிருக்கிறது. அழகான கண்கள். இன்னொரு காட்சியில் அப்பாவான அந்தோனியாவே சைக்கிளை திருடும் போது அவன் அதிர்ந்து போய் பார்க்கும் அவன் காட்சி நடிப்பின் உச்சமாக பார்க்கிறேன்.
கடைசியில் சைக்கிள் கிடைக்காமலேயே போய் விடுகிறது.
படம் வெளியான ஆண்டோடு ஒப்பிடும்போது அந்தோனியா குடும்ப செலவு பற்றி மகனோடும் உரையாடும் காட்சியில் மாதம் 12000 சம்பளம் ஒரு நாளைக்கு 800 ரூபாய் செலவு என்றெல்லாம் பேசுகிறான். இன்னும் நாம் கிராமங்களில் அதே நிலைமைதான் என்று புரிந்து கொள்ள முடிந்தது.
சைக்கிள் பாகங்கள் விற்கும் கடைத் தெரு, அப்பாவும் மகனும் நடந்து செல்லும் பாலம், அந்தோனியாவின் எளிய வீடு, சைக்கிள் திருடியவனாக அந்தோனியா சந்தேகப்படும் நபரின் வீட்டை சோதனை போடும் காட்சி, அந்தோனியாவும் ப்ருனோவும் மழைக்கு ஒதுங்கி நிற்கும் காட்சி தொடக்கத்தில் அவர்கள் முதல் நாள் சைக்கிளில் வேலைக்குச் செல்லும் காட்சியில் பேருந்து அவர்களை போலவே சைக்கிளில் செல்லும் சாமானிய மனிதர்கள் சாலையில் போகும் காட்சி என்று படம் முழுவதும் மிக இயல்பான காட்சி அமைப்புகள் பார்ப்பதற்கு இனிய அனுபவத்தை தருகிறது.
ஆற்றுப் பாலத்தில் இருந்து மகன் ப்ரூனோ தவறி விழுந்து விட்டதாக அந்தோனியா பரிதவிக்கும் காட்சியும் அந்தோனியாவின் மனைவி எப்படியாவது பணம் சம்பாதிக்கலாம் குடும்பத்தை முன்னேற்றலாம் பெருங் கனவுகளோடு அவன் தொப்பியை தைத்து கொடுக்கும் அழகான அன்பு நிறைந்த காட்சி மனதில் வலியை உண்டாக்குகிறது. இன்னும் ஆழ்ந்து சிந்தித்தால் கண்ணீரை வரவழைக்கும்.
இறுதி காட்சியில் கால்பந்து போட்டி முடிந்து வெளியேறும் மக்கள் கூட்டத்தில் ஒருவனாக அந்தோனியா கலந்து விடுவது வாழ்க்கையின் நிஜ யதார்த்ததை காட்சி படுத்துகிறது. எளிய குடும்பத்தின் கதையை அதன் முரண்பாடுகளோடும் உண்மையாகவும் படம் பதிவு செய்துள்ளது.
Comments
Post a Comment