ஆரஞ்சு நிற பெண் - குறுங்கதை

மழை பொழிந்து விரித்த சாலை. 
கையில் ரோஜாக்கள் நிறைந்த பூச்செண்டு வைத்துக்கொண்டு நின்றிருந்தேன். 

பேருந்து வந்து நின்றது. பனிக்கட்டிகள் உருள்வதைப் போல சிறுவர்கள் இறங்கினார்கள். இறகினை போல வந்து நின்றாள் வெண்ணிலா. மஞ்சள் டீ சர்ட்டும், நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள். லூஸ் ஹேரில் இருந்ததால் அடிக் கடி முடியினை கொதி விட்டுக்கொண்டாள். 

என்னைக் கடந்து சென்றாள். வழக்கம் போல கோபமான பார்வை. 

நான் பின்தொடர்ந்தேன். 

இப்பொழுது மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. நானும் 
ரோஜா நிற பூச்செண்டும் நனைய ஆரம்பித்தோம். 

" excuse me, " என்று அவளை நோக்கி கூப்பிட்டேன். 

மின்னலைப் போல ஒரு கணம் திரும்பி விட்டு நடந்து சென்றாள். அவள் கோபம் அந்த மின்னலை விடவும் அதிகமானதாக இருந்தது. 


மறுநாள் காபி ஷாப்பில் அவளை மறுபடியும் சந்தித்தேன். வெள்ளை புடவை முகத்தில் சந்தனம் பூசிஇருந்தாள். அதிகம் கூட்டமில்லை. ஸ்பீக்கரில் ரஹ்மான் பாடல் இசைத்துக் கொண்டிருந்தது. எப்படியும் கோவிலுக்கு சென்று வந்திருப்பாள் எனத் தோன்றியது. 

நான் நகராமல் பார்த்து கொண்டு நின்றேன். அதுவே சுகமாக இருந்தது 

நண்பர்களோடு சிரித்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் முகம் மாறியது. சிவந்து போன பொம்மையின் முகம் போல முறைத்தாள். 

நான் ஒரு லெமன் ஜூஸ் ஆர்டர் செய்து படி உட்கார்ந்து கொண்டேன். 
அவள் நண்பர்களிடம் என்னைக் காட்டி எதோ சொன்னாள். எதோ குற்றம் புரிந்ததை போல நான் கலவரமடைந்தேன். அவள் நண்பர்கள் வந்து என்னை அடிப்பார்களோ என்ற பயம் வந்தது. ஆனால் எதோ பொய்யான தைரியத்தில் உட்கார்ந்திருந்தேன். 

சில நேரங்கள் கடந்திருக்கும்.. 
அவளே என்னை நோக்கி வந்தாள். எனக்கு மனம் முழுக்க பட பட என அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் மிகவும் பிடிந்திருந்தது. அநேகமாக மூச்சு விட சிரமப் பட்டேன்.  
அவள் அருகில் வந்து நின்றாள். 
எனக்கு கூச்சமாக இருந்தது. 

"ஹாய் " என்றேன். 

" என்ன எதுக்கு நீங்க follow பண்றீங்க" என்றாள். அவள் வாசனை சூடாக இருந்தது.  

" அதெல்லாம் ஒன்னு இல்லைங்க " என்று போய் சொன்னேன். 

" எதோ பாருங்க எனக்கு பிடிக்கல என் life வேற ப்ளீஸ் இனிமே வராதீங்க அப்பறோம் மரியாதை கேட்டுடும் " என்று கூறி விட்டு திரும்பி நடந்தாள். 

" நான் உன்ன லவ் பண்றேன் வெண்ணிலா " என்று கூறிவிட்டேன்.  
இப்பொழுது மூச்சு பலமாக வாங்கியது. ஜுரம் வந்தவனை போல மனம் பரபரப்பாக இருந்துது. 

திரும்பி பார்த்து நின்றாள்.  

மெதுவாக என் எதிர்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டாள். 

" என்னப் பத்தி தெரியாம பேசுறீங்க நா உங்களக்கு செட் ஆக மாட்டேன் " என்றாள். இப்பொழுது ஆரஞ்சு நிற க்ளாசில் லெமன் ஜூஸ் வந்தது. சிறுது நேர இடைவெளி. 

" உன்ன பிடிச்சிருக்கு உன்கூட வாழ ஆசை படறேன் " என்று தைரியமாக சொன்னேன். இப்போழுது பயம் இல்லை. அவளோடு நெடு நாட்கள் பழகியதை போல சிநேகம் உருவானதை போல மனம் இளகி இருந்தது. 

" நா அழகா இருக்கேனு எனக்கு தெரியும், but love is not only beauty " என்றாள். 

" நீ அழகா இருக்கேன்னு மட்டும் நா உன்ன விரும்பல " என்றேன். 

" என்னப் பத்தி உங்களக்கு என்ன தெரியும் '. 

" ஒரு நாள் பஸ் ஸ்டாப் ல நின்னுகிட்டு இருந்த அப்போ ஒரு ஆட்டோ உன்ன கிராஸ் பண்ணி போச்சு, அதிலேருந்து விழுந்த பர்ஸ் எடுத்துட்டு நீ ஆட்டோ பின்னாடி ஓடுன, அவன்கிட்ட கொடுக்க, அப்பவே உன்ன பிடிச்சிருச்சு, " என்றேன்.

அவள் என்றோ நடந்ததை நினைவுபடுத்தினாள்.  

" இதெல்லாம் ஒரு காரணமா "

" லவ் கு காரணமே தேவ இல்ல பிடிச்ச போதும் ஆனால் என்கிட்ட காரணமும் இருக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கவும் செய்து " என்றேன். இப்பொழுது அவள் எனக்கு கிடைக்கமாட்டாளோ என்ற பயம் வந்தது. 

" உனக்கு புரியல என்ன பத்தி, தெரியல " என்று கோபப் பட்டாள். எதோ ஒன்றை என்னிடம் சொல்வதற்கு முயற்சி செய்கிறாள் என புரிந்தது. 

" நா உன்ன டிஸ்டர்ப் பண்ணல but i am waiting " என்றேன். ஒரு நிமிடம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

அவள் ஹென்ட்பேக்கில் இருந்து ஒரு துண்டு பேப்பரை எடுத்து என்னிடம் நீட்டினாள். 

ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தல் 
இரண்டு வயதானவர்கள் கைது. என்ற தினத்தந்தி நாளிழதளின் செய்தி துணுக்கை கொண்டிருந்தது அந்த பேப்பர். 

ஒரு மெல்லிய அதிர்ச்சி மனதில். ஆனால் அதன் வலி அதிகமானது. என் சந்தேகம் அதிகரிப்பதற்குள் எழுந்து நின்றாள்.  

" அந்த பேப்பர்ல இருக்குற பொண்ணு பேர நல்ல பாருங்க " என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். 

அவள் கூறியது சரி அதில் வெண்ணிலா என்றுதான் இருந்தது.  
எனக்குத் தலை சுற்றியது. அவசரமாக எழுந்து வெளியே சென்றுவிட்டேன். நேராக பக்கத்தில் உள்ளப் பெட்டிக் கடைக்கு சென்று ஒரு சிகரெட் பற்ற வைத்து க் கொண்டேன். கொஞ்ச நேரம் "புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு " என்ற விளம்பர பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  
திடீரென்று வாழ்க்கையே முடிந்து விட்டதாக தோன்றியது. அவளிடம் தான் தவறாக நடந்து கொண்டதை போல குற்ற உணர்வு தோன்றியது. 

ஒரு வாரம் கழித்து நான் கொடைக்கானல் சென்றிருந்தேன். பச்சை நிற சாலைகள். எங்கு பார்த் தாலும் பனி. மலைகளின் இடுக்குகளுக்குள் மேகமும் பனியும் உறைந்து போயிருந்தன. 
மஞ்சள் நிற இதமான வெயில். ஆனால் நான் சோகமாக இருந்தேன். அங்கிருந்த நாட்கள் மது அருந்துவதும் குளிரை அள்ளித் தின்பதுமாக இருந்தேன். மனம் முழுவதும் வெண்ணிலா தான் நிறைந்திருந்தாள்.  

" உன்னால அவள மறக்க முடியாதுடா ஆனால் நீ அவளை மறப்பது தான் நல்லது " என்று என் நண்பன் கூறினான்.  

" அவளுக்கு இந்த கொடும நடந்ததல அவளை என்னால எப்படி விட முடியும் "

இப்பொழுது ஒரு சிகெரட் பற்ற வைத்துக் கொண்டேன். மஞ்சள் வெயிலுனுடே சிகெரட் புகை குளிரோடு வெளி வந்து கொண்டிருந்தது. ஆனால் மனதின் வேதனைகளை என்ன செய்வதென தெரியவில்லை. 

"நா வெண்ணிலா வ மேரேஜ் பன்னலாம்னு முடிவு பன்னிட்டான்டா " என்று முடிவாக சொன்னேன். மனதில் அவளை நினைத்துக் கொண்டேன். வலி அதிகமானது . 

" நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தான் ". என்றான் . கொடைக்கானலில் தூறலாக மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. வெய்யிலினுடாக பெய்த மழை வானிலிருந்து ஆரஞ்சு மழை பொழிவதை போல இருந்தது. குளிரத் தொடங்கியது. நானும் நண்பனும் ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்றிருந்தோம். அவன் சுற்றலா பயணிகளை சுற்றிக் காண்பிக்கும் பணி செய்து கொண்டிருந்தான். நான் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் கொடைக்கானல் வந்து விடுவேன். மது அருந்துவது, அருவியில் குளித்துவிட்டு மீன் வறுத்து சாப்பிடுவது என உல்லாசமாக இருப்போம். கார்த்தியும் நானும் பள்ளியிலிருந்து நண்பர்களாக இருக்கிறோம். 

" இந்த ஹோட்டலில் மட்டன் வறுவலும், கொத்து பரோட்டாவும் நல்லாருக்கும் " என்று அவன் இரண்டு கொத்து பரோட்டாவும் மட்டன் வறுவலும் ஆர்டர் செய்தான். 

நான் மௌனமாக ஹோட்டலில் உள்ள மீன் தொட்டியை பார்த்தக் கொண்டிருந்தேன். மனதில் வெண்ணிலாவிற்கு நடந்த கொடுமை ஆக்கிரமித்திருந்தது.  

" வென்னிலா நடந்த கொடுமை யாருக்கும் நடந்திருக்கக் கூடாதுடா, பொண்ணுங்க ல நாசமாக்கிறவனை எல்லாம் வெட்டி எறியனும் " என்றான் கார்த்திக். 
நான் அமைதியாக இருந்தேன். ஹோட்டலில் ரோஜா பூவின் வாசனை வந்து கொண்டிருந்தது. கம்மிய இருளில் மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் ஹோட்டல் மிதந்திருந்தது.  

" அவ வாழ்க்கையில் இனிமே நான்தான் அவளுக்கு துணை குழந்தை மாறி பாத்துக்கிடுவேன் என் வெண்ணிலாவை " என்று அழ ஆரம்பித்தேன்.  
" டேய் பைத்தியமா உனக்கு எல்லாம் நல்ல படியா நடக்கும் அவ உனக்குத்தாண்டா " என்று தோளில் கை போட்ட படி ஆறுதல் கூறினான் . 

" உங்க அம்மா அப்பா இதுக்கு சம்மதிப்பங்களா ". 

" ம்ம் " என்றேன்.. ஆனால் வெண்ணிலா என்ன சொல்லப்போகிறாள். எனத் தெரியவில்லை. 

" எந்த ஒரு பொன்னும் அவகிட்ட காதலை சொன்னவன் கிட்ட ஒடனே ஏற்றுகொள்ள மாட்டாள், அதுவும் வெண்ணிலா சின்ன வயசிலேயே ரொம்ப பாதிக்க பட்டிருக்கா" என்று கார்த்தி சொன்னான். 

எனக்கு என்ன சொல்வதேன்றே தெரியவில்லை. 

" அவளுக்கு ஆண்கள் கிட்ட நிறைய வெறுப்பு இருக்கும் அவ வாழ்க்கையை நாசமாக்கிவர்கள் ஆண்கள், ஆனால் நீ அத மாத்தி காட்டு, இனிமே அவ வாழ்க்கையை சந்தோசமா மாற்றுவது உன் கையில் தான் உள்ளது " என்றான். 
எனக்கு கொஞ்சம் நம்பிக்கை தருவதாக இருந்தது அவன் பேச்சு.  
ஆனால் அவள் என் காதலை ஏற்றுக் கொள்வாளா என்கிற பயம் வலி தரக் கூடியதாக இருந்தது. 

" இப்ப நா என்ன பண்றதுடா " என்றேன். எனக்கு எதுவும் புரியவில்லை. 

" அவளைப் பத்தி தெரிஞ்சும் நீ அவளை லவ் பண்றன்னு அவ சந்தோச படுவா, நீ ஊருக்கு போய் அவகிட்ட பேசி அவளை கல்யாணம் பண்ணிக் கோடா " என்றான். 

மறுநாள் காலையில் சென்னை கிளம்பினேன். கார்த்திக் வந்து வழியனுப்பி வைத்தான். அவளிடம் மறுபடியும் போய் பேசி நல்ல முடிவெடுக்க சொன்னான்.  

அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். அவளை காஃபி ஷாப்பில் சந்தித்தது. அவளிடம் பேசியது, அவள் சந்தனம் பூசிய முகம், அவள் லூஸ் ஹேரில் மாடர்னாக வந்திருந்தது என அனைத்தும் நினைவுவிற்கு வந்தது. ஆனால் அவள் கண்களில் அவன் மீதான சிநேகம் இருந்ததை அவனால் உணர முடிந்தது. 

டாஸ்டாவ்ஸ்கியின் " வெண்ணிற இரவுகள் " புத்தகம் வாசித்ததும் அதில் வருகிற நாஸ்தென்கா வை நினைத் து கொண்டேன். அனைத்துப் பெண்களுக்குள்ளும் யாரும் அறிந்து கொள்ள முடியாத துயரம் இருப்பதை உணர முடிந்தது . அவள் எனக்குத்தான் என்று தனக்குள் கூறிக் கொண்டேன். 

சென்னை சென்று ஒரு வாரம் எனக்கு நிறைய வேலை இருந்தது. அவளைப் பார்க்க போக வில்லை.  

அவளுக்காக கோல்ட் வாட்ச் வாங்கிகொண்டு அவளை பார்க்க அதே காபி ஷாப்பிற்கு சென்றேன். அவளுக்கு கிப்ட் தரும் பொழுது அவள் முகம் சந்தோச படுவதை பார்க்க ஆசையாக இருந்தது. 

அந்த காபி ஷாப் மூடி சீல் வைத்திருந்தார்கள். மஞ்சள் பிளாக் போடப்பட்டு அனுமதி இல்லை என போர்டு போடப் பட்டிருந்தது. 

இரண்டு போலீஸ் காவலுக்கு இருந்தார்கள். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை . 

பக்கத்தில் உள்ள டீக் கடையில் கேட்டான். 
அவன் கொடைக்கானல் சென்ற நாட்களில் அங்கு ஒரு கொலை நடந்ததாகவும் ஒரு பெண் துப்பாக்கியால் இரண்டு பேரை சுட்டுக் கொன்றதாகவும் சொன்னான். அதிலிருந்து அந்த காபி ஷாப்மூட பட்டு விட்டதாக கூறினான் கடைக் காரன் எல்லாம் செய்தித் தாள்களிலும் இதான் பிளாஷ் செய்தி. 
நான் அவசரமாக மூன்று நாட்களுக்கு முன் வெளியான செய்தியினை வாங்கி பார்த்தேன்  

வெண்ணிலா தான். சிறு வயதில் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர்களை பழிவாங்கிய பெண் என்று அந்த செய்தி தொடங்கு வதற்கு முன்பாக பேப்பரை கிழிக்க ஆரம்பித்தேன் . சாலையோராம் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன் மனம் முழுவதும் வேதனையாக இருந்தது. இனிமேல் வெண்ணிலாவை எப்பொழுதும் பார்க்க முடியும் எனத் தெரிய வில்லை. 
அவள் ஜெயிலில் இருந்து வரும் வரை அவளுக்காக காத்திருப்தென முடிவு செய்தேன்.  
கோடைகாலம் ஆரம்பித்ததனால் வெயிலின் கடுமை அதிகமாக இருந்தது. நான் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். வாகன நெரிசல், மனிதர்களின் இரைச்சலுக்கு நடுவே வெண்ணிலா ஒரு கனவினைப் போல தோன்றினாள். அவள் உண்மையில் தைரியமான பெண். 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )