ஹாட்ஸ்பாட் பரிதாபங்கள்...!

KJB Talkies, Seven Warrier films தயாரித்து விக்னேஷ் கார்த்தி இயக்கி வெளிவந்த திரைப்படம் Hotspot. ட்ரைலர் வெளிவந்த போதே அந்த படம் பெரும் சர்ச்சையோடு வெளிவந்தது. அந்த படத்தின் இயங்குனர் விக்னேஷ் கார்த்திக் திரைப்படம் வெளிவந்து முழுமையாக பார்த்துவிட்டு அதன் பிறகு எதுவென்றாலும் பேசிக்கொள்ளுங்கள் என்றும் படத்தணிக்கைக் குழு படைப்பு சுதந்திரத்தை தடை செய்கிறது என்ற குற்றச் சாட்டு நிலவியது எனவும் குறிப்பிட்டிருப்பார் . இதனால் A தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

 படத்தில் பெண்கள் என்றால் திருமண வாழ்வில் அடங்கிதான் போக வேண்டுமா? ஆண் -பெண் கலாச்சார வாழ்வின் தொடர்ச்சியாக இன்றளவும் பெண்களின் திருமண வாழ்வு ஆண்களின் ஆதிக்கத்தில் உள்ளதாகவும் அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் சொல்லியிருப்பார். அதே சமயங்களில் பெண்களால் ஆண்களின் வாழ்க்கையும் சிக்கலாக மாறுகிறது.


மூன்று பகுதியாக சொல்லப்படும் திரைக்கதையில் இரண்டாவது பகுதியிலும் பெண்ணியம் மற்றும் பெண் சுதந்திரம் தான் பிரதானமாக பேசப்படுகிறது.
இது வரை பாலியல் தொழில் செய்யும் பெண்களின் வாழ்க்கை திரைப்படங்களில் பேசப்பட்டுள்ளது. ஆனால் இதே போன்று ஆண் பாலியல் தொழிலாளி ( Male sex worker ) பற்றி குறைவாகத்தான் பேசப்படுள்ளது . அதற்கு மாற்றாக புதிதாக Crush lust வேறு லவ் வேறு என்று சொல்லும் ஒரு ஆண் தனது காதலி தனக்கு பிடித்த வேறொரு ஆணோடு உடலுறவு வைத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள ஏன் மறுக்கிறான்? ஆனால் ஆண் மட்டும் crush lust என்று காரணம் சொல்லிக் கொண்டு யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் பெண் செய்தால் மட்டும் அவளை இந்த உலகம் தூற்றும் பழிக்குமா என்ற முக்கியமான கேள்வியை எழுப்பப்படுகிறது? அதே போன்று உடல் சார்ந்த பாலியல் தேவை என்பது அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கிற இயற்கையான தேவைதான். ஆனால் ஆணின் உடல் தேவைக்கு பலியாகும் பெண்கள் மட்டும் சமூகத்தால் குற்றம் சட்டப் படுவதும் கலாச்சார மதிப்பீடுகளுக்குள் விமர்சிக்கப் படுவதும் ஏன்? தவறு யார் செய்தாலும் தவறுதான். பெண் பாலியல் தொழில் செய்தால் குற்றம் என்றால் அதில் ஈடுபடுகிற ஆண்களும் குற்றவாளிதான். மத கட்டுப்பாடுகளும் கலாச்சாரம் மதிப்பீடுகளும் ஏன் ஆண்களுக்கு மட்டும் விதிவிலக்காக இருக்கிறது? தொடர்ந்து பெண்கள் மட்டும் ஏன் இந்த கலாச்சார அமைப்பு முறையில் சிக்கிக் கொண்டு கஷ்டப் பட வேண்டும் என்பதை அழகாக காட்சிபடுத்தப் பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் அதிகரிக்கும் செல்போன் மோகம், ஆன்லைன் பாலியல் குற்றங்கள், குறிப்பாக செக்ஸ் வீடியோ சாட்டிங், நிர்வாண வீடியோ கால் அதற்காக இளைஞர்களை குறிவைத்து பணம் கொள்ளை யடிக்கும் குற்றச்செயல்களை பெண்களும் ஆண்களும் சேர்ந்தே செய்கிறார்கள். தவறான உறவு முறையில் பெண்களும் குற்றச் செயல்கள் புரிவதும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைதான். இதனால் பாதிக்கபடும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு கேள்விக் குறியாக்கப் படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.


வணிக லாபத்திற்காக டிவியில் விளம்பரப்படுத்துதல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் பெருகிவிட்ட சூழலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பங்கு என்ன என்பதை பற்றியும் மூன்றாம் பகுதியில் இயக்குனர் கதையை விவரிக்கிறார். நிறைய டிவி ஷோக்களில் வெளிப் பரப்படும் ஆடல்பாடல் நிகழ்ச்சியில் குழந்தைகள் பங்கேற்ப்பதும் திறமையை வெளிக் கொண்டு சினிமா, செலிப்ரட்டியாக வர விரும்பும் யதார்த்த சூழலில் TRB எனப்படும் வணிக லாபத்திற்காக சிறுவர்கள் குழந்தைகளின் உளவியல் பெரும் பிரச்சனைக்குள்ளாகியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். உண்மையில் சொல்லப் போனால் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும் விதமாக திறன் மற்றும் உளவியல் மேம்பாடு குறித்த எந்த விழிப்புணர்வு படமோ, நிகழ்ச்சிகளோ நடத்தப் படுவதில்லை . குழந்தைகளின் கற்பனைத்திறன் ஆன்லைன் கேம்ஸ் மற்றும் புகழ் தேடும் டிவி ஷோக்கள் மூலம் மழுங்கடிக்கப் படுகின்றன. இதனால் மன அழுத்தம் அதிகரித்து குழந்தைகளின் வாழ்வை சிதைக்கும் போக்கு அதிகரக்கிறது.
குடும்பத்தில் பெற்றோர்கள் வணிக மனநிலை கொண்டவர்களாக குழந்தைகளை இயந்திரமாக பார்க்கின்றனர். சிவப்பு சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து, சிரிக்கும் வகுப்பறை போன்ற எழுத்தாளர் எஸ். ராவின் புத்தகங்கள் குழந்தைகளின் உளவியலையும் அவர்கள் மீது வைக்கப்படும் சமூக அழுத்தமமும் பேசப்பட்டிருக்கும். செல்போன், இது போன்ற டிவி ஷோக்களில் குழந்தைகளின் பாலுணர்வை தூண்டும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப் படுவதும் இதனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுமியும் அவள் குடும்ப சிதைவின் கதையை படத்தின் இறுதிக் கட்டம் காட்சிபடுத்துகிறது. ஹாட்ஸ்பாட் ( HOTSPOT ) படம் இன்றைய சமூக பிரச்சனைகளில் முக்கியமாக ஆண்- பெண் குடும்ப உறவு, பாலியல் சுதந்திரம் மற்றும் பெண் சுதந்திரம், குழந்தைகளின் மீது நிகழ்த்தப் படும் பாலியல் வன்கொடுமை போன்றவற்றை பற்றி பேசுகிறது. சஸ்பென்ஸ் வித்தியாசமான காட்சியமைப்பு, நேர்த்தியான திரைக்கதை இன்றைய சினிமாவின் கதை சொல்லும் non linear பாணியில் உருவாக்கப்பட்டிருப்பதும் இதன் சிறப்பு. விக்னேஷ் கார்த்தியின் இந்த படம் நிறைய விருதினை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அன்பும் நன்றியும்!.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )