நான் எழுதிய புத்தகம்

அந்த நாட்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எதுவும் சொல்வதற்கில்லைதான். நான் ஏன் சில புகைப் படங்களில் சிரிப்பதில்லை என்று பல நேரங்களில் தோன்றியிருக்கிறது. வார்த்தைகளே இல்லாத மனிதனுக்கு பேச எதுவும் இருப்பதில்லை. ஆனால் நினைவுகளும் நினைக்கப்படுதலும், நினைத்துக் கொண்டேயிருப்பதும்தான் இறுதியில் வாழ்கை தரப் போகிற இடம். நான் விரும்புவதெல்லாம் அப்பொழுது என்ன நினைத்துக் கொண்டிருந்தேன் என்பதை தெரிந்து கொள்ளத்தான் . நினைவுகள் நினைவுகளாகி போய்க் கொண்டேயிருக்கிறது. மௌனங்களின் நீள் நதியாக நான் மாறிவிட்டதை யாரிடம் சொல்லப் போகிறேன் என்கிற தேடலில் எழுதப்பட்ட கவிதைகள்தான் இவை. மனம் விட்டு பேச விரும்புகிற யாருமற்ற மனிதனின் சில குரல்களை யாரவது கேட்க விரும்பினால் அதற்க்காக எனது கவிதைகள் துணை செய்யும் என்று நம்புகிறேன். எழுத்தின் மீது தீராத காதலை ஏற்படுத்திய எனது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோருக்கு அன்பும் நன்றியும். என்றென்றும் என் நினைவில் வாழும் எழுத்தாளர் தஸ்தாயேவ்ஸ்கி அவர்களுக்கு இந்த முயற்சியை சமர்ப்பிக்கிறேன். என்னையும் எனது எழுதும் பணிக்கு ஊக்கப்படுத்திய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் , வாசித்த புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 G. கோபி மின்னஞ்சல்: Gopiriyan0629@gmail.com தொடர்புக்கு : 8675871151

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )