இந்தியா அடுத்து என்ன செய்ய வேண்டும்?
10, ஜூன் 2024
அமெரிக்காவில் நடைபெறும் T20 உலககோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டம் பரபரப்பாக இருந்தது. ஆட்டம் ஆரம்பித்த உடனே மழை குறுகிட்டதால் ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் உடனே மழை நின்று ஆட்டம் ஆரம்பித்தது. பொதுவாக அமெரிக்க ஆடுத்தளங்கள் பவுலிங் செய்வதற்கே சாதகமாக இருக்கிறது. பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது ஒரு நல்ல முயற்சி. ஏனென்றால் இரண்டாம் ஆட்டத்தின் போது மழை பெய்த காரணத்தால் மைதானம் ஈரப்பதம் காரணமாக பந்து நின்று வரும். எவ்வளவு அடித்தாலும் போகாது. ரிஷப் பண்ட் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் அடித்தாட முடியவில்லை. சூர்யா குமார் யாதவ், சிவம் டூபே, ஜடேஜா போன்ற வீரர்கள் சரியாக ரன் அடிக்க வில்லை. இதற்கு காரணம் மைதானத்தின் தன்மைதான் என்று கூறிவிட்டு போக முடியாது. பாக்கிஸ்தான் சிறப்பாக பந்து வீசினார்கள்.
கிரிக்கெட் ஆரம்பித்த நாட்களில் இருந்தே பாக்கிஸ்தான் அணியின் ஒரே பலவீனம் பேட்டிங். மேலும் அந்த அணி வீரர்கள் உணர்வு பூர்வமானவர்கள். அவர்களிடம் இன்னும் உளவியல் மேம்பாடு தேவை. அதே சமயம் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று உணர்வு பூர்வமாக விளையாட கூடியவர்கள். அவர்கள் ஆட்டம் ரசிக்கும் படியாக இருந்தது.
பாக்கிஸ்தான் அமெரிக்க அணியுடனான ஆட்டத்தின் போது கூட கடைசி பந்தை தவறாக வீசியதால் அது பவுண்டரிக்கு போய் சூப்பர் ஓவர் வரை போய் விட்டது. மற்ற படி பாக்கிஸ்தான் சிறப்பான அணி. பேட்டிங் மட்டும்தான் குறைபாடு.
இந்திய இனி வரும் போட்டிகளில் சிவம் டூபே, ஜடேஜா, கோலி சிறப்பாக விளையாட வேண்டும். ரோஹித் இந்த முறை கோப்பையை வெல்ல சிவம் டூபே,ஜடேஜா, கோலி, சிராஜ் போன்ற வீரர்கள் பொறுப்பாக ஆர்வமோடு விளையாட வேண்டும். வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். அதை பயன்படுத்தி முன்னேற வேண்டும். விக்ரம் வேதாவில் வேதா சொல்வதை போல, " நமக்கு ஒன்னு வேணும்னா அதுக்காக இறங்கி வேலை செய்யணும் முயற்சி பண்ணனும் எதுவுமே பண்ணாம எதுவுமே கிடைக்காது என்பதுதான். முற்றிலும் உண்மை.

சிவம் டூபே ஸ்பின்னர்ஸை நன்றாக அடித்து விளையாட கூடியவர். ஆனாலும் நேற்று அவர் விளையாடும் போது பயந்து மெத்தனமாக அவுட் ஆனார். அந்த பந்தை front footil தூக்கி அடித்து இருக்கலாம் அவருடைய மெத்தனம் தான் காரணம். சிவம் டூபே இன்னும் கவனமாக ஆர்வமாக விளையாட வேண்டும். அதே போன்று ஜடேஜாவும் எப்போதாவாது இது போன்று சொதப்புவார். அவருக்கு தொடர்ச்சியாக பேட்டிங் கிடைப்பதுமில்லை. இந்தியா கடைசி ஓவர்களில் நிறைய ரன் குவிக்க சிவம் டூபே ஜடேஜா போன்றோர் நன்றாக விளையாட வேண்டும். தைரியமாக பயத்தை விட்டு விட்டு நன்றாக cover மேல் தூக்கி அடிக்க வேண்டும். அக்ஸர் பட்டேல் பேட்டிங் ஆட வந்தது ரோஹித் செய்த நல்ல திட்டம். ஓரளவுக்கு பத்து ஓவர்கள் வரை ஸ்ட்ரைக்கை தக்க வைக்க உதவியது. ஏற்கனவே சொன்னது போல அமெரிக்க மைதானங்கள் பவுலிங் செய்வதற்கே சாதகமாக இருந்ததால் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டார்கள்.
கிரிக்கெட் ஆரம்பித்த நாட்களில் இருந்தே பாக்கிஸ்தான் அணியின் ஒரே பலவீனம் பேட்டிங். மேலும் அந்த அணி வீரர்கள் உணர்வு பூர்வமானவர்கள். அவர்களிடம் இன்னும் உளவியல் மேம்பாடு தேவை. அதே சமயம் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று உணர்வு பூர்வமாக விளையாட கூடியவர்கள். அவர்கள் ஆட்டம் ரசிக்கும் படியாக இருந்தது.
பாக்கிஸ்தான் அமெரிக்க அணியுடனான ஆட்டத்தின் போது கூட கடைசி பந்தை தவறாக வீசியதால் அது பவுண்டரிக்கு போய் சூப்பர் ஓவர் வரை போய் விட்டது. மற்ற படி பாக்கிஸ்தான் சிறப்பான அணி. பேட்டிங் மட்டும்தான் குறைபாடு.
இந்திய இனி வரும் போட்டிகளில் சிவம் டூபே, ஜடேஜா, கோலி சிறப்பாக விளையாட வேண்டும். ரோஹித் இந்த முறை கோப்பையை வெல்ல சிவம் டூபே,ஜடேஜா, கோலி, சிராஜ் போன்ற வீரர்கள் பொறுப்பாக ஆர்வமோடு விளையாட வேண்டும். வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். அதை பயன்படுத்தி முன்னேற வேண்டும். விக்ரம் வேதாவில் வேதா சொல்வதை போல, " நமக்கு ஒன்னு வேணும்னா அதுக்காக இறங்கி வேலை செய்யணும் முயற்சி பண்ணனும் எதுவுமே பண்ணாம எதுவுமே கிடைக்காது என்பதுதான். முற்றிலும் உண்மை.
Comments
Post a Comment