புளிய மரத்தின் கதை

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதை நாவல் வாசித்தேன். தாமோதர ஆசானை மிகவும் பிடித்து விட்டது. ஊரில் இது போன்ற பெரிய மரமும் கதை சொல்லியும் இருந்தால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும் ஆனால் குழந்தைகள் விளையாடி விட்டு உடனடியாக போய் விடுவதை போல அவரும் நாவலின் முதற் பகுதியிலேயே காணாமல் போய்விடுகிறார் . ஒரு கனவு போல .  நாவலில் வரும் புளிய மரம் சிறுவயது கிராமத்தின் நினைவுகளை கிளறி விடுகிறது . நாவலின் எழுத்து முறை நன்றாக இருந்தது. எத்தனையோ மரங்களை ஜெசிபி மூலமோ கோடாரி மூலமோ அறிவாளை கொண்டோ வெட்டுவதையும் அந்த மரம் போராடி வீழ்வதையும் பார்த்திருக்கிறேன். அந்த மரங்களின் பின்னால் உள்ள நினைவுகளும் மனிதர்கள் வாழ்வில் அது நிலத்தில் வேர் ஊன்றுவதை போலவே எவ்வளவு ஆழமாக பிணைக்கப் பட்டிருப்பது என்பதும் உண்மை.

இயற்கையின் மாபெரும் கொடை மரம். மனிதர்களால் எத்தனை பாதிப்பு அடைந்தாலும் மௌனமாக அனைத்தையும் உள் வாங்கிக் கொண்டு நிழலையும் காய், பழங்களையும் தரும் அற்புத ஜீவன். இந்த நாவலை வாசித்ததும் நான் பார்த்த விளையாடிய மரத்தையும் அதனுடன் வாழ்ந்த மனிதர்களையும் நினைத்து பார்க்கிறேன்.  குறிப்பாக ஆசானை போல கதை சொல்பவர்கள் வாழ்க்கை முழுவதும் தேவை படுகிறார்கள். கதை வழியின் கலாச்சார பண்பாட்டு வாழக்கையை அடுத்த தலை முறையிடம் எடுத்து சொல்வதும் பெரும் பணி. இயற்கை சார்ந்த இடர்களை நாம் சந்தித்துக் கொண்டு வருகிறோம். மழையின்மை, புவி வெப்பமயமாதல், நில மாசுபாடு, காற்று மாசுபாடு போன்ற ஏராளம் இயற்கை சார்ந்த பிரச்சனைகள் மனித வாழ்வை பாதிக்க கூடியவை. எல்லா கால கட்டத்திலும் மனிதர்களால் இயற்கை இடரை சந்திக்கிறது. மனித வாழ்வின் ஆதாரம் இயற்கைதான். அதிலும் காற்றை சுத்தப் படுத்தவும் மழை ஏற்படவும் மரங்கள் காரணமாக இருக்கின்றன. புளிய மரத்தின் கதை வழியாக மரம் வளர்ப்பதின் அவசியத்தை புரிந்து கொள்கிறோம். மரம் எனும் குறியீடு வழியாக பண்பாட்டு வாழ்க்கையையும் கிராமங்களின் வாழ்வையும் சொன்னது இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்.புளிய மரத்தின் கதை நாவல் வாசித்தேன். தாமோதர ஆசானை மிகவும் பிடித்து விட்டது. ஊரில் இது போன்ற பெரிய மரமும் கதை சொல்லியும் இருந்தால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும் ஆனால் குழந்தைகள் விளையாடி விட்டு உடனடியாக போய் விடுவதை போல அவரும் நாவலின் முதற் பகுதியிலேயே காணாமல் போய்விடுகிறார் . ஒரு கனவு போல .  நாவலில் வரும் புளிய மரம் சிறுவயது கிராமத்தின் நினைவுகளை கிளறி விடுகிறது . நாவலின் எழுத்து முறை நன்றாக இருந்தது. எத்தனையோ மரங்களை ஜெசிபி மூலமோ கோடாரி மூலமோ அறிவாளை கொண்டோ வெட்டுவதையும் அந்த மரம் போராடி வீழ்வதையும் பார்த்திருக்கிறேன். அந்த மரங்களின் பின்னால் உள்ள நினைவுகளும் மனிதர்கள் வாழ்வில் அது நிலத்தில் வேர் ஊன்றுவதை போலவே எவ்வளவு ஆழமாக பிணைக்கப் பட்டிருப்பது என்பதும் உண்மை. இயற்கையின் மாபெரும் கொடை மரம். மனிதர்களால் எத்தனை பாதிப்பு அடைந்தாலும் மௌனமாக அனைத்தையும் உள் வாங்கிக் கொண்டு நிழலையும் காய், பழங்களையும் தரும் அற்புத ஜீவன். இந்த நாவலை வாசித்ததும் நான் பார்த்த விளையாடிய மரத்தையும் அதனுடன் வாழ்ந்த மனிதர்களையும் நினைத்து பார்க்கிறேன்.

குறிப்பாக ஆசானை போல கதை சொல்பவர்கள் வாழ்க்கை முழுவதும் தேவை படுகிறார்கள். கதை வழியின் கலாச்சார பண்பாட்டு வாழக்கையை அடுத்த தலை முறையிடம் எடுத்து சொல்வதும் பெரும் பணி. இயற்கை சார்ந்த இடர்களை நாம் சந்தித்துக் கொண்டு வருகிறோம். மழையின்மை, புவி வெப்பமயமாதல், நில மாசுபாடு, காற்று மாசுபாடு போன்ற ஏராளம் இயற்கை சார்ந்த பிரச்சனைகள் மனித வாழ்வை பாதிக்க கூடியவை. எல்லா கால கட்டத்திலும் மனிதர்களால் இயற்கை இடரை சந்திக்கிறது. மனித வாழ்வின் ஆதாரம் இயற்கைதான். அதிலும் காற்றை சுத்தப் படுத்தவும் மழை ஏற்படவும் மரங்கள் காரணமாக இருக்கின்றன. புளிய மரத்தின் கதை வழியாக மரம் வளர்ப்பதின் அவசியத்தை புரிந்து கொள்கிறோம். மரம் எனும் குறியீடு வழியாக பண்பாட்டு வாழ்க்கையையும் கிராமங்களின் வாழ்வையும் சொன்னது இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்.  

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )