படம் : 1| தப்புத் தாளங்கள் | விமர்சனம்

தப்பு தாளங்கள் திரைப்படம் பெண்ணியத்தை மிக ஆழமாக சொல்கிற திரைப்படம். K. பாலசந்தர் இயக்கிய படங்களில் தப்பு தாளங்கள் முக்கியமான படம். பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மீது இந்த சமூகம் எப்படியெல்லாம் கருணையற்றதாக நடந்து கொள்கிறது என்று K. B அழகாக பதிவு செய்துள்ளார். உண்மையில் இந்த படம் பார்த்து முடித்தவுடன் பெண்களாக பெண்களால் மட்டுமே வாழ முடியும் என்று தோன்றியது. இன்றளவம் கூட இந்த சாதியால் புரை யோடி போன இந்த சமூகத்தில் ஆண் - பெண் உறவு முறையும் காதலும் கேள்விக் குறிதான். ஏன் படித்த சமூகத்தில் ஆண் பெண் சுதந்திரமாக காதலிக்க முடியாமல் போகிறது. அப்படியே ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கையை இந்த சமூகம் எப்படியெல்லாம் விமர்சக்கிறது. 
தவறு செய்து விட்டு திருந்தி வாழும் மனிதர்களுக்கு சமூகம் சூடும் அவப் பெயர்களும் மதிப்பீடுகளும் மனதில் வலியை உண்டாக்குகின்றன. தவறான அடக்குமுறை கொண்ட சமூக கலாச்சார வெளியை துறந்து ஒரு பெண் வாழ்வதும் இந்த சமூகத்தை கேள்வி கேட்பதும் அவளை எந்தளவுக்கு அலைகளிக்கிறது. ஆனாலும் பெண்கள் அந்த ஆபத்தை சந்தித்து தைரியமாக வாழ்கிறார்கள் என்பது தான் வியப்பானது. தப்பு தாளங்கள் படம் ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் எப்படி நிலை நிறுத்திக் கொள்ள போராடுகிறார்கள் என்று யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் ஆண்களை பற்றிய மிகை யான கதபாத்திர சித்தரிப்பும் உள்ளது. உண்மையில் புரிந்து கொள்ள முடியாத ஆண்களின் மௌனம் உலகிலேயே மிக கனமானது என்று எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிட்டதை நினைவு படுத்துகிறேன். 

அந்த படத்தில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணிற்கு நடக்கும் வன்முறை காட்சி மனதை உலுக்கி விடக் கூடியது. எதற்க்காக இந்த காட்சி இடம்பெற்றுள்ளது என்று நாட் கணக் கில் யோசித்துள்ளேன். உண்மையில் கர்ப்பிணி பெண்கள் மீது கருணையோடு தான் மனிதர்கள் நடந்து கொள்வார்கள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் இந்த சமூகம் அப்படியில்லை என்று பாலசந்தர் உணர்த்தி விட்டார். 
இந்த படம் முழுவதும் சமூக வாழ்க்கை குறித்து தான் அவர் காட்சி படுத்திய படியே போகிறார். இடையே வசன போஸ்டர்கள் நாவல் வாசிக்கும் அனுபவத்தைத் தருகிறது. சமூகம் கட்டமைப்பை மீறிய ஆண் பெண் விளிம்பு நிலை பெண்களையும் அவர்கள் அக உலகையும் வசனத்தின் வழியே அவர் உருவாக்கியுள்ளார்.

எதற்காக 2k கிட்ஸ்களின் உலகத்தில் இப்படியான ஒரு திரைப்படம் தேவை? அதுதான் நவீன AI சினிமா உருவாகி விட்டதே என்று கேள்வி எழுவது உண்மை. ஆனால் அதே இந்த காலத்தில் தான் பெண்ணடிமைத்தனம், பெண்கள் மீது சமூகம் வைக்கும் விமர்சனம், அதுவும் குறிப்பாக பிழைக்க வழியில்லாமல் பாலியல் தொழில் நடத்தும் பெண்கள் மிக மோசமாக நடத்தப்படும் அவலமும் நடக்கிறது. பெண்களை நம்பாமல் தீட்டு என்ற பெயரில் குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் வன்முறை ஏற்றுக் கொள்ள முடியாது. கிராமங்களில் அதிகம் நடக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது குடும்ப உறவுகளுக்குள் பெண்கள் ஒதுக்கப் படுவதுவும் தீட்டு என்ற பெயரில் உளவியல் பிரச்சனைக்கு உள்ளாவதுதான். இந்த காலகட்டத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான திரைப்படம். 
ரஜினி மற்றும் சரிதாவின் நிஜமான பாவனைகள் கொண்ட நடிப்பு. பொதுவாக சினிமாவில் இருக்கும் கமர்ஷியல் வணிக சினிமாவிற்கான நோய் தொற்று இதில் இல்லை. 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )