தக்கை மீது ஒரு கதை

தக்கையின் மீது நான்கு கண்கள்
-
சா. கந்தசாமி

சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதை தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையே ஆன போட்டி மனப்பான்மையை பற்றி எழுதபட்டுள்ளது. குளத்தில் மீன் பிடிக்கும் விதத்தையும் ஒவ்வொரு மீனும் எப்படி பிடிப்படும் என்பது பற்றியும் நுட்பமாக பேசுகிறது. தனக்கு மீன் பிடிபடவில்லை என்பதை தாத்தாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவே தாழ்வு மன்பான்மையை உண்டாக்குகிறது. அதனால் அவருக்கு வெறுப்பும் கோபமும் ஏற்பட்டு தனது மனைவியையும் பேரன் மீது வெளிப் படுத்துகிறார். ஆனால் அவர் மனதில் ஆழத்தில் எங்கோ தனது மகளை இழந்த சோகமும் வலியும் அவரை ஆக் ரோசம் கொண்டவராக மாற்றுகிறது என்று புரிந்து கொள்கிறோம். ஏன் வயதில் மூத்த பெரிவர்கள் தன்னை விட வயதில் குறைந்த மகனிடமோ பேரனிடமோ தோற்றப் போக விரும்ப வில்லை. யாரையும் இகழ்தல் இழுக்கு என்றுதானே நாம் கற்றுள்ளோம்.


நம்முடைய அகங்காரம் நம் மீது அன்பாக இருப்பவரைக்கூட வெறுப்பானவராக மாற்றி விடும். எனில் உண்மையான புரிதல் கொண்ட அன்பு என்பது என்ன?. கருணையும் உண்மையை ஒத்துக் கொண்டு நிரை குறைகளை சமமாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அம்மா அப்பா இல்லாமல் தாத்தா பாட்டி அல்லது சித்தப்பா சித்தி இல்லையென்றால் உறவினர்கள் வீட்டில் வாழும் சிறுவர் சிறுமியர்களுக்கென்று ஒரு தனிமை உள்ளது. அது யாராலும் புரிந்து கொள்ள முடியாத அக துயரம். என்னதான் இருந்தாலும் சொந்த வீட்டில் சுதந்திரமாக பெற்றோர்களின் அரவணைப்பில் வாழ்வதை போலவே நிம்மதியாக இருக்க முடியாது என்பதே உண்மை. தனக்கு பிறக்கவில்லையென்றாலும் ஆதரவற்ற குழந்தைகளை தனது சொந்த பிள்ளைகளை போலவே நினைக்கும் மனது உருவாக வேண்டும்.  ராமு அதற்கு சிறந்த உதாரணம். மேலும் வெளி உலகில் ஒரு ஆண் அடையும் அவமானம் வலி தோல்வி கசப்பு என அனைத்திற்க்கும் வீட்டில் உள்ள மனைவி பிள்ளைகளை அடித்து தண்டிப்பதின் வழியாக கோபத்தை தணித்துக் கொள்வது ஆணாதிக்க போக்கின் உச்சம். 



Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )