நாயனம் வாசிப்பு
இறந்து போன ஒருவரின் துக்க வீட்டில் நடக்கிற கதை. அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவர் இறுதி ஊர்வலத்தில் நாயனம், மேள தாளம் எல்லாம் இசைக்க வேண்டும் என்று மகன்களிடம் தெரிவிக்கிறார். அதன் படி அவர் இறந்த துக்க வீட்டில் நாயனம் ஏற்பாடு செய்ய படுகிறது. ஆனால் நாயனம் வாசிக்க ஆள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. யாரும் கிடைக்கவில்லை. மேலும் இறந்த உடலை இடு காட்டிற்கு எடுத்து செல்ல தாமதம் ஆகிறது. அந்த விரக்தியில் துக்க வீட்டில் நடக்கும் உரையாடல்கள் மிக நுட்பமாக எழுத பட்டுள்ளது. மேலும் துக்க வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், பேச்சுக்கள், துக்க வீட்டில் ஒருவருக்கு பசிக்கிறது. சுடுகாடு போய் எரியூட்டி வந்த பிறகு தான் குளித்து சாப்பிட முடியும் என்று ஒருவர் அங்காலாய்த்துக் கொள்கிறார். இன்னொருவர் வெற்றிலை போட்டு விட்டு பீடியோ சுருட்டோ பிடிக்க முடியவில்லை என்று வருத்தப் பருகிறார். ஆளாளுக்கு உடலை சீக்கிரம் எடுக்கமாறு சொல்லி அவசரப் படுத்துகிறார்கள். இறுதியில் நாயனம் வாசிக்கும் ஆள் வருகிறார். இறுதி ஊர் வலம் புறப்பட்டு போகிறார்கள்.
ஆனால் அதற்கு அப்புறம் தான் சோதனையே ஆரம்பிக்கிறது.
நாயனம் வாசிக்கிறவன் அவர்களை படாத பாடு படுத்துகிறான். இறந்த வீட்டில் வரும் துக்கத்தை விட அவன் வாசிக்கும் விதம் தான் அனைவருக்கும் சோதனை யாக இருக்கிறது. இதனால் ஆத்திரப் பட்டு தலையாரி முத்தன் என்பவன் அவனையும் ஓங்கி அறை விடு கிறான். இதனால் அவன் நாதஸ்வரம் கிழே விழுகிறது. ஒரு வழியாக அனைவரும் நிம்மதி பெரு மூச்சு விட்டார்கள் என்று ஆ. மாதவன் கதையை முடிக்கிறார்.
சாவு வீடுகளில் மனிதர்கள் மிகுந்த நெருக்கமாகி விடுகிறார்கள். அது நாள் வரை பேசாத பக்கத்து வீட்டு காரர்கள் கூட உதவிக்கு வந்து நிற்பார்கள். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்யும் பெரிய மாமா வோ சித்தப்பா வோ கடைக்கு போக என்று சிறு சிறு வேலைகள் செய்ய சிறுவர்கள் என்று நிறைய மனிதர்கள் உள்ளனர். உண்மையில் தமிழ் வாழ்வில் சாவு வீட்டு சடங்கு என்றே தனி வரலாறு உள்ளது.
எல்லாத்தையும் விட இசையை ரசிப்பவர்களுக்கு மனதில் ஒரு திருப்தி ஆறுதல் இருக்கிறது . கல்லூரி படிக்கும் நாட்களில் நண்பர்கள் அறையில் மணிக் கணக்கில் இசை கேட்டபடி கிடந்திருக்கிறேன். பிடித்த பாடலை இசையை கூட்டமாக பாடி மகிழ்ந்திருக்கிறோம். அதுவும் இளைய ராஜா பாடலையும் நண்பர்களோடு அதைக் கேட்டு பாடி திரிந்த நாட்களை மறக்கவே முடியாது. மனிதன் இசை யை தேர்ந்தெடுக்கிறானா அல்லது இசை மனிதனை தேர்வு செய்கிறதா தெரிய வில்லை. இசை பல நினைவுகளை கிளறி விடுகிறது. பெரும்பாலான நேரங்களில் வாழ்வில் துயரம் நேரும் போதெல்லாம் இசை கேட்பதே போதும் என்று நினைத் திருக்கிறேன்.
மேலும் இன்றும் கூட அன்றாடம் வாழ்வில் போராடும் விளிம்பு நிலை மக்களை, வசதி இல்லாத ஓய்வே இல்லாத மனிதர்களை இசை ஆற்றுப்படுத்துவதை விட வேறெதுவும் ஆறுதல் அளிப்பதில்லை.
நாயனம் தெருகூத்து, மேள தாளம் போன்ற பல்வேறு இசை க் கலைஞர் களை நாம் மதிப்பதில்லை. திருமணம், சாவு வீடு, வீட்டு நிகழ்ச்சி களுக்கு இப்போது நல்ல பண்பாட்டு இசை கேட்க படுவதில்லை. அப்படியே அந்த நிகழ்வு நடந்தாலும் அந்த இசை கலைஞர் களை அவமானப் படுத்த படுகிறார்கள். இந்த கதை இறந்த பின்னரும் ஒரு மனிதர் இசை கேட்டு தான் தான் இறுதி ஊர் வலம் நடக்க வேண்டும் என்ற விருப்பத்தை மட்டும் சொல்ல வில்லை. இன்றைக்கு அந்த கலைகள் எப்படி அழியக் கூடிய கலையாக மாறி வரும் அவலத்தையும்
பதிவு செய்கிறது.
Comments
Post a Comment