மருத மெச்சும் அன்னக்கொடி
கலையை மனிதர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. அந்த கலையே மனிதர்களை தேர்ந்தெடுக்கிறது. என்று திரைப்படம் ஆரம்பித்த உடனே அந்த வாசகம் வெகுவாக கவர்ந்து விட்டது.
ஏன் ஜிகர்தண்டா படம் பார்க்க வேண்டும்? திரைக்கதையிலும் கதை சொல்லும் முறையிலும் இந்த படம் மிக நேர்த்தியாக எடுக்கப் பட்டிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் திரைப்படம் எதை பேசுகிறது? என்றால் சினிமாவில் நடக்கும் ரகசியங்களை அதாவது அரசியல். ஓரு ரவுடியின் வாழ்க்கைக்குள் கலை சென்றால் எப்படி இருக்கும் என்ற முயற்சிதான் இந்த படம் உருவாக முக்கிய காரணம் என்று கார்த்திக் சொல்கிறார். சினிமாவில் வெற்றி பெற்ற எத்தனையோ திரைப்படங்கள் சொல்லாத சினிமா பற்றிய அரசியலை இந்த படம் கையாண்டிருக்கிறது .
காட்டில் வாழும் மிருகங்கள் அழிக்கப் பட்டு யானை தந்தம் பிடுங்கபடுவதும் அதன் பின்னால் இருக்கும் அரசியல் என்று கதை முக்கியமாக காட்சிபடுத்தப் பட்டுள்ளது . பழைய மதுரை பற்றிய நினைவுகள் அந்த மனிதர்கள் நகரின் காட்சிகள் மனிதர்களின் அடையாளங்கள் அனைத்தும் பேசப் படிருப்பது இன்னும் சிறப்பு.
லாரன்ஸ் மற்றும் sj சூர்யா Dsp கதாபாத்திரம் என்று வரலாற்று நினைவுகளையும் அலசுகிறது.
அன்றாட வாழ்வில் கலை ஏன் மனிதனுக்கு தேவை படுகிறது? மனித மனம் வலியில்லாத ஆரோக்கியமான முறையில் இயங்க கலைக்கு முக்கிய பங்கிருக்கிறது. கலையை நேசிக்கவிட்டால் மனிதனுக்கு மீட்சியில்லை என்று எழுத்தாளர் டோஸ்டவஸ்கி சொல்கிறார்.
ஒவ்வொரு நாளும் இரவில் அடுத்த நாளை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற ஆயிரம் கேள்விகள்? நமக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? நாம் நினைத்த அனைத்தும் ஏமாற்றமாக போய்விட்டதே என்று வேதனையுறாத மனிதர்கள் இல்லை. அந்த மாதிரியான நேரங்களில் பார்க்கபடுகிற திரைப்படங்கள் மனிதனை அந்த துயரத்தைக் கடந்து போக செய்கின்றன. அடுத்த நாளை தைரியமாக எதிர்கொள்ள வைக்கிறது. நேற்று பார்த்த திரைப்படம் பற்றி மணிக் கணக்காக பேசுகிற மனிதர்களை பார்க்கும் போது சினிமா எந்தளவுக்கு மனித வாழ்விற்கு தேவை என்று பிரமிப்பு தோன்றுகிறது. சினிமா என்கிற பிரமாண்ட கலை வடிவம் மனிதனுக்கு தேவை. எதுவுமே இல்லாத மனிதன் பற்றிக் கொள்ள கண்டிப்பாக எதாவது ஒரு கலை வடிவம் தேவைதான்.
அலியா சீசர் மற்றும் அவனின் மழைவாழ் மக்களின் வாழ்க்கை அழியும் தருவாயிலும் கலையை நம்பி அவர்கள் சாவை எதிர்கொள்கிறார்கள். மலைவாழ் மக்களை காவல்துறை அதிகாரிகள் ஒடுக்குவதற்க்காக வரும் காட்சியும் அவர்கள் காட்டுப் பரணி பாடும் அவர்களின் ஆட்டமும் இதுவரை எந்த சினிமாவிலும் நாம் பார்க்காத காட்சி. உலகம் முழுவதும் நிலம் கையகப் படுத்தும் அரசியல் காரணமாக சாமானிய மனிதர்கள் பாதிக்கப் படுகின்றனர். இன்னும் சொல்லப் போனால் சட்டம் வரைவுகளுக்கு உட்பட்ட மனிதர்களும் அதிகார அரசியலால் பாதிக்கபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதன் சிறந்த நவீன பதிவுதான் இந்த திரைப்படம்
. சினிமா மனிதனின் வாழ்விற்கான காரணத்தை அதன் கதையை காட்சி படுத்துகிறது. ஆனால் மனிதர்கள் மனதில் சினிமா பற்றிய கனவும் நம்பிக்கையும் ரசனையும் பற்றி மதுரையில் நடக்கும் அரசியல் பிரச்சனையை மையமாக கொண்டு சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நல்ல கலை எவ்வளவு மோசமான ரவுடியையும் நல்ல மனிதனாக மற்றும் என்பதே நல்ல கலைஞனாக கார்த்திக்கின் நம்பிக்கை. அது படம் முழுவதும் இருக்கும். மொத்தத்தில் சினிமா எனும் ஊடகம் மீது பெரிய நம்பிக்கையும் மரியாதையையும் ஏற்படுத்திய கார்த்திக் சுப்புராஜ்ஜிற்க்கு அன்பும் நன்றியும். நல்ல திரைப்படம்.
Comments
Post a Comment