அன்புள்ள எஸ். ராவிற்கு...!

எழுத்தாளர் எஸ். ரா அவர்களின் புதிய புத்தக வெளியீடு. சிறப்புரையாக ஆஸ்திரேலிய எழுத்தாளர். ஹென்றி லாசன் குறித்து உரையாற்றும் நிகழ்வு. இதுவரை ஹென்றி லாசனை பற்றி நான் தெரிந்து வைத்திருக்கவில்லை. 
சாதாரண மனிதர்களின் கண்களில் புத்தகங்கள் என்பது வெறும் அச்சிடப்பட்ட காகிதங்கள். ஆனால் வாசகர்களுக்கு மட்டுமே அது வைரத்தை விட மேலானது. ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு ஆன்மா இருக்கிறது.
நானும் சென்னையில் பல நாட்கள் அறையில் தனிமையில் தங்கி இருந்த நாளில் குடும்பத்தை பிரிந்த துயரத்தில் இருந்து மீட்டுக் கொள்ள புத்தகமே துணை செய்தன. ஒவ்வொரு நாளும் இலக்கியம் குறித்து மனதிற்குள் சிந்திப்பது அடுத்து என்ன வாசிக்க போகிறோம் என்ற சிந்தனை மனதை உற்சாகமாக வைத்திருக்கிறது. வாழ்க்கை எதை நோக்கி போகிறது எதிர்காலம் என்னவாகும் என்ற திகைப்பிற்கு நடுவே புத்தகம் வாசிப்பது என்பது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மழை வெள்ளத்தின் போது எஸ். ரா அவர்களின் பதிப்பகத்தில் தண்ணீர் புகுந்து இருபது லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் சேதம் அடைந்தன. அந்த செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியது. டிசம்பர் 26ல் எஸ்.ராவின் புத்தக வெளியீடு என்பது மகிழ்ச்சி ஊட்டும் செய்தி. இயற்கை மாறும் என்பது உண்மைதான். நமது துக்கம் சந்தோசமாக மாறும். 
இனிய மற்றும் ஆர்வமூட்டும் நிகழ்வாக அமையட்டும்!

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )