மழைவெள்ளத்தை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
நிக்ஜாம் புயல் ஏற்பட்டு சென்னை குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்துள்ள நிலையில் பலரும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெள்ள மீட்பு பணிக்காக சென்ற சமூக ஆர்வலர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக வெளியான செய்தி திடுக்கிட வைத்தது. மேலும் இன்னொரு ஏரியாவில் தந்தை தாய் மற்றும் தங்கையை காப்பாற்றிய மகன் உயிரிழந்த தகவல் இயற்கையின் முன் மனிதனின் நிலை என்ன? என்ற திகைப்பை உண்டு பண்ணியது. இடுப்பு வரை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் கரையில் குளிரில் கைகால்கள் விறைத்த நிலையில் நடுங்கியபடி இருக்கும் பாட்டி, என்று இந்த சமூக வலைதளங்களில் வெளியான மழை தொடர்பான செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். போன மாதம் வரை சென்னையில் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையின் மழை வெள்ளம் மக்களை எந்தளவு பாதித்துள்ளது? என்று நினைக்க நினைக்க இயற்கையின் மீது நாம் வைத்துள்ள மதிப்பீடுகள் அனைத்தும் நம்ப முடியாததாக இருக்கிறது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பதிப்பகத்தின் குடோனில் வைக்கப்பட்ட
இருபது லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்த செய்தி என்னை மேலும் வருத்தம் அளித்தது. இது போன்ற விவசாய நிலங்கள், வாகனங்கள் என்றும் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மழை வெள்ளத்தை தடுக்க நாம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
1. சென்னை வெள்ளம் ஏற்பட முக்கியம் காரணம் என்ன?
2. மழைநீர் தேங்கும் இடமென்றும் தெரிந்தும் ஏன் அங்கு குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டது?
3. இது தொடர்பான அரசு துறைகள் என்ன மாதிரியான முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டன?
4. ஒவ்வொரு சாதாரண மனிதனும் இந்த மாதிரியான இடரில் என்ன செய்ய முடியும்?.
5. இனி வருங்காலத்தில் இது போன்ற இடர் ஏற்படாமல் இருக்க நாம் மேற்கொள்ளும் விழிப்புணர்வு திட்டங்கள் என்ன?
6. மழை வெள்ளத்தின் போது இளைஞர்கள், மாணவர்கள் / மாணவிகள் கற்றுக் கொண்ட பாடம் என்ன?
7. அறிவியல் துறையில் இந்த பேரிடரை சமாளிக்கும் வழி என்ன இன்னும் என்ன மாதிரியான கண்டுபிடிப்புகள் நிகழ வேண்டும்?
8. ஊடகங்கள் மழை வெள்ளம் தொடர்பான செய்திகள் எந்த அளவுக்கு உண்மையான செய்தி?
9. இந்த கடின சூழலில் ஏற்படும் உயிரிழப்புகள், நோய் போன்றவற்றை தடுக்க போதுமான மருத்துவ வசதிகள் உள்ளதா
10. குழந்தைகள், வயதான முதியவர்கள், நோயாளிகள், மாற்று திறனாளிகள், பெண்கள் ஆகியோரின் பாதுகாப்பு குறித்து நாம் யோசிக்க வேண்டியவை என்ன?
11. வெள்ள நிவாரணம் உதவி தொகை குறித்து தகவல் மற்றும் அதை எவ்வாறு பெறுவது?
Comments
Post a Comment