மருத்துவ வீரன்

 காலம்தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இயற்கையை பொறுத்த வரை காலம் வாழ்க்கை, மனிதர்கள் அனைவரும் கற்பனைகள் தான். இயற்கை எனும் மாய கண்ணாடியில் விழும் பிம்பங்கள்தான் மனிதர்கள். இதில் கடவுள் மனிதர்கள் உருவாக்கிய அழகான நல்ல கற்பனை. பிறப்பு மற்றும் மரணம் இயற்கையால் நிகழ்கிறது. சில மனிதர்கள் அந்த இயற்கையை வென்று விடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.


ஹர்சவர்தன் என்ற டாக்டர் தனக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்கி இருப்பது தெரிந்து தனது மனைவிக்கு விவாகரத்து கொடுத்து அவரது எதிர்
கால வாழ்விற்கு அனைத்து ஏற்பாடு
களையும் செய்த பின்னர் தைரியமாக தனது மரணத்தை எதிர்கொண்டார். பணி காரணமாக ஆஸ்திரேலியா சென்ற அவர் உடற்பயிற்சி செய்த போது ரத்த வாந்தி எடுத்தார். பரிசோதனை செய்து பார்த்ததில் புற்றுநோய் இருப்பது தெரிந்துகொண்டார். 2 ஆண்டுகளில் மரணம் நிச்சயம் என்பதை மருத்துவராக தெரிந்து கொண்டாலும் குடும்பம் உறவுகள் மனைவியிடம் ஆறுதல் சொல்லி உற்சாக படுத்தியுள்ளார். மேலும் மூன்றரை லட்சம் கொடுத்து தனக்கான சவ பெட்டியை அழகாக வடிவமைத்து மரணத்தை தைரியமாக எதிர் கொண்டுள்ளார். வாழவே ஆயிரம் பிரச்னை எதிர்கால பயம், மன
க் கவலை என்று நாம் புலம்பும் போது மரணத்தை உற்சாகமாக எதிர் கொண்ட அந்த மருத்துவர் நினைவில் நிற்கிறார். யூடுப்யில் இந்த வீடியோ பார்த்து மனதை பாதிக்கவே இதை எழுதி குறித்து வைக்கிறேன். இந்த செய்தி மனதில் ஏதோ நம்பிக்கையையும் தைரியத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த மருத்துவருக்கு என் அன்பும் நன்றியும்.  வாழ்வு நிலையில்லாத ஒன்று என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. சில மனிதர்கள் அதை வென்று விடுகிறார்கள்.

Link
https://youtu.be/92RydkNtDCwWatch

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )