காபி குடித்த கடவுள்...!

கடவுள் மனித வாழ்க்கையோடு விளையாடக்கூடியவர் என்று பலமுறை கேள்விபட்டிருக்கிறோம்.  பல தடைகளை தாண்டி ஆசை, கோபம், அகங்காரம், காமம், போன்ற பல அழுக்குகளை களைந்து மனிதன் தெளிவு பெறவும் நிர்வாணத்தை அடையவும் கடவுள் அவனுக்கு சோதனைகளை தருகிறார். மனிதன் தனது தனிப்பட்ட சுய தேடல், முயற்சி, பொறுமை, தன்னம்பிக்கை வழியாக மட்டுமே ஞானத்தை அடைய வேண்டும் என்று புத்தர் சொல்கிறார். ஆனால் புதுமை பித்தன் கதையில் கடவுள் மனிதனின் வாழ்க்கையை நலம் விசாரிக்க நண்பனைப் போல வருகிறார். கடவுளும் கந்தசாமி பிள்ளையும் என்ற கதையில் தற்செயலாக கடவுளை ஒரு பேருந்து நிலையத்தில் வைத்து சந்திக்கிறார் கந்தசாமி. அவர் தன்னைத்தான் சந்திக்க வந்திருக்கிறார் என்று தெரியாமல் இருவரும் வேடிக்கையாக பேசிக் கொண்டே வருகிறார்கள். வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கடவுளும் அந்த மனிதனும் ஒரு காபிக் கடையில் காபி குடிக்கிறார்கள். அதற்கான பில்லை கந்தசாமி தந்திரமாக கடவுள் தலையில் கட்டி விடுகிறார். கடவுள் பில்லை கட்டுவதற்கு பணம் செலுத்தும் போது கடை முதலாளி அவரை ஏமாற்றி கடவுள் கள்ள நோட்டு ஒன்றை கொடுத்து ஏமாற்றிவிடுகிறார். இதை சரியாக கண்டுபிடித்த கடவுள் கந்தசாமியிடன் விவாதம் செய்கிறார். 
உலகை படைத்த கடவுள் மனித வாழ்வில் நல்லவை கெட்டவை, ஒழுக்கம், நீதி, நெறி, அறம் போன்ற பல நெறிமுறைகளை வகுத்துள்ளார் என்று கேள்விபடிருக்கிறோம். இந்த கதையில் மனிதர்களின் உலகம் பொய், தந்திரம், பணத்திற்காக எதையும் செய்ய துணியும் குற்றங்களால் நிறைந்திருப்பதை பற்றி இதில் கடவுள் கேள்வி எழுப்புகிறார். மத சண்டைகள், மதஅரசியல், மதவெறி என்று உலகம் பல யுத்தங்களை சந்தித்திருக்கிறது. கடவுள் பற்றிய பல தொன்மக் கதைகளும், புராணங்களும் கட்டு கதைகளையும் நம்பி மனிதர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடு, போட்டி மனப்பான்மை காணும் சமகால பிரச்சனைகள் நம்மை முன்னேற விடாமல் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றன. இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவே கடவுள் சாமானிய மனிதன் வாழ்வில் ஒருநாள் வீட்டிற்கு அவனை பார்க்க வந்தால் என்ன நடக்கும் என்று வேடிக்கையாக விளையாட்டாக இந்த கதை எழுதப் பட்டுள்ளது.


ஏன் இப்படியான கதை தேவை? கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்பதைத் தாண்டி கடவுள் நம்மை சந்திக்க வந்தால் நாம் எப்படி அவரை எதிர்கொள்வோம். உண்மையில் கடவுள் என்ற சக்திதான் கடவுளை படைத்தாரா அல்லது மனிதனின் கற்பனைதான் கடவுளா என்று பல பரிமாணங்களில் இந்த கதையில் சிந்திக்கத் தொடங்குகிறோம். ஆனால் இந்த கதையின் அடிப்படையாக நாம் எதை கருதுகிறோம்?
எது உண்மை கற்பனை என்றாலும் அடிப்படையில் மனிதனின் ஒழுக்கம் என்ன? அவன் நடத்தை, சிந்தனை வழியாக சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? தனிமனிதன் தனது வாழ்வை புரிந்து கொண்டு முன்னேறுவது போல் இந்த உலகையும் தான் வாழும் சமூகத்தையும் முன்னேற்றவேண்டும் என்ற நீதியையும் நாம் தெரிந்து கொள்கிறோம்.  கடவுளாகவே இருந்தாலும் மனித சமூகத்திற்கு வந்து விட்டால் ஏமாற்றப்படுவதும்? தந்திரமாகத்தான் வாழ வேண்டிய நிர்பந்தமும் ஏன்? என்று சுயமாக நாம் யோசிக்கவே புதுமைப் பித்தன் இப்படியொரு சிறுகதை எழுதியிருக்கிறார். தன்னை  ஒருவன் ஏமாற்றும் போது பதிலுக்கு நாமும் அவனை ஏமாற்றுகிறோமோ இல்லையா? குறிப்பாக வறுமையின் நெருக்கடியில் மனிதன் பணத் தேவைகளும்தான் இந்த குற்றங்கள் நடக்கிறதென்றால் இந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு யார் காரணம் கடவுளா? தான் வாழ பிறரை எளிய மனிதரை சுரண்டும் மனித அமைப்புகளா என்று நாம் நுட்பமாக சிந்திக்க வேண்டும். சமூக அறத்தைப் பற்றி முக்கியமாக விவாதித்துள்ளார் புதுமைபித்தன். 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )